கடந்தவருடம் ஆகஸ்ட் மாதம் 15 ம் திகதி ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றிய பின்னர் யுத்தத்தினால் அழிவடைந்துள்ள நாடு தனது ஊடக நிறுவனங்களில் 39.59 வீதமானவற்றை இழந்துள்ளது 59.6 வீத பத்திரிகையாளர்களை இழந்துள்ளது என எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஊடகபணியாளர்கள் வேலை இழந்ததால் பொருளாதார வீழ்ச்சி காரணமாக பல ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டதால் ஆப்கானிஸ்தானி;ன் ஊடக சமூக பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது என டோலோ நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்;ட் 15 ம் திகதி ஆப்கானில் ஆட்சி பொறுப்பை தலிபான் கைபற்றியது முதல் ஆப்கான் தனது ஊடக நிறுவனங்களில் 39.59 வீதமானவற்றை இழந்துள்ளது 59.6 வீத பத்திரிகையாளர்களை இழந்துள்ளது குறிப்பாக பெண் பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
பெண் பத்திரிகiயாளர்களில் கால்வாசி பேர் வேலைவாய்பற்ற நிலையில் காணப்படுகின்றனர் அந்த 11 மாகாணங்களில் அந்த தொழில்துறையிலிருந்து இல்லாமல் போயுள்ளனர் எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
மோசமான பொருளாதார நெருக்கடி ஊடகசுதந்திரம் மீதான மோசமான ஒடுக்குமுறையின் மத்தியில் இது இடம்பெற்றுள்ளது.
கடந்த வருடம் ஆப்கானில் பத்திரிகை துறை அழிக்கப்பட்டுவிட்டது என தெரிவித்துள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பின் செயலாளர் நாயகம் கிறிஸ்டபர் டெலொரியோ தெரிவித்துள்ளார்.
ஊடக பணியாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை துன்புறுத்தல்களை முடிவிற்கு கொண்டுவருவதற்காக அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் ஊடகபணியாளர்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் அவர்கள் தங்கள் பணிகளை செய்ய அனுமதிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பின் தரவுகளின் படி ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் 15 ம் திகதிக்கு முன்னதாக 547 ஊடக நிறுவனங்கள் காணப்பட்டன, தற்போது இதில் 219 நிறுவனங்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டன.
ஆப்கானில் பத்திரிகையாளர்களின் நிலையை சுட்டிக்காட்டியுள்ள பத்திரிகையாளர் மீனா ஹபீப் நான் எனது வாழ்க்கையில் 9 வருடங்கள் ஊடகங்களிற்காக பணியாற்றியுள்ளேன்,வேறு வேலையொன்றை பழகுவதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை என டொலொ நியுசிற்கு தெரிவித்துள்ளார்.
ஊடக வன்முறைகள் மற்றும் தகவல்களை பெறுவது போன்ற விடயங்களிற்கு தீர்வை காண்பதற்காகஇஸ்லாமிய எமிரேட் ஊடகங்கள் பத்திரிகையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்காக குழுவொன்றை அமைக்கவேண்டும் என ஆப்கானிஸ்தானின் சுதந்திர பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் ஹொஜட்டுல்லா முடாடிடி தெரிவித்துள்ளார்.
அரசியல் மாற்றம் காரணமாக ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ளனர் அவர்களில் பலர் எதிர்காலம் குறித்த தெளிவான திட்டமின்றி பாக்கிஸ்தானிலும் ஏனைய உலக நாடுகளிலும் தங்கியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கியநாடுகளின் உதவி தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மனித உரிமை மீறல்கள் 173 பத்திரிகையாளர்களையும் 163 ஊடக பணியாளர்களையும் பாதித்துள்ளது-அதிகாரத்தில் உள்ளவர்களே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்கள் மீது அதிகரித்து கட்டுப்பாடுகள் சர்வதேச அளவில் கடும் கண்டணத்தை பெற்றுள்ளன ஐக்கியநாடுகளும் பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுவும் கைதுகளை கண்டித்துள்ளதுடன் தலிபான் உள்நாட்டு பத்திரிகையாளர்களை துன்புறுத்துவதையும் தடுத்துவைத்தல் மற்றும் அச்சுறுத்தல் மூலம் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதை நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாட்டின் ஊடக பரப்பில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன அரைவாசிக்கும் மேற்பட்ட சுதந்திர ஊடகங்கள் மூடப்பட்டுள்ளன நூற்றுக்கான பத்திரிகையாளர்கள் வெளியேறியுள்ளனர்,யுஎன்எம்;ஏ தெரிவிக்கின்றது.
தலிபான் அதிகாரத்திற்கு வந்த பின்னர் 70 வீதமான ஊடக நிறுவனங்கள் தங்கள் செயற்பாடுகளை நிறுத்தியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM