உலகின் மிக கவர்ச்சியான விளையாட்டு வீராங்கனை

Published By: Vishnu

22 Aug, 2022 | 11:35 AM
image

ஜேர்­ம­னிய மெய்­வல்­லு­ந­ரான அலிகா ஸ்மித் உலகின் மிக கவர்ச்­சி­யான விளை­யாட்டு வீராங்­க­னை­யாக வர்­ணிக்­கப்­ப­டு­கிறார். 

ஜேர்­ம­னியில் 21 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை நிறை­வ­டைந்த ஐரோப்­பிய மெய்­வல்­லுநர் சம்­பி­யன்ஷிப் போட்­டி­களில் பங்­கு­பற்­றிய அலிகா ஸ்மித், இப்­போட்­டி­களில் பங்­கு­பற்­று­வ­தற்கு தெரிவு செய்­யப்­பட்­டதை அறிந்­த­வுடன் தான் மகிழ்ச்­சியில் ஆனந்த கண்ணீர் வடித்­த­தாக தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

23 வய­தான அலிகா ஸ்மித் 400 மீற்றர் ஓட்­டத்தில் பிர­ப­ல­மா­னவர். 

5 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இத்­தா­லியில் நடை­பெற்ற 20 வய­துக்கு உட்­பட்­டோ­ருக்­கான ஐரோப்­பிய சம்­பி­யன்ஷிப் போட்­டி­களின் 4 X 400 மீற்றர் ஓட்­டத்தில் அலிகா அடங்­கிய ஜேர்­ம­னிய அணி வெள்­ளிப்­ப­தக்கம் வென்­றதின் பின் அலிகா ஸ்மித் பிர­ப­ல­மாகத் தொடங்­கினார்.

அதை­ய­டுத்து சமூக வலைத்­தங்­களில் தன்னை பின்­தொ­டர்­ப­வர்­களின் எண்­ணிக்கை ஒரே நாளில் ஒரு லட்­சத்­தினால் அதி­க­ரித்­த­தாக அலிகா தெரி­வித்­துள்ளார்.

அவுஸ்­தி­ரே­லிய சஞ்­சி­கை­யொன்று உலகின் மிக கவர்ச்­சி­க­ர­மான வீராங்­கனை என அலிகா ஸ்மித்தை முதன்­மு­தலில் வர்­ணித்­தது.

இன்ஸ்­டா­கி­ராமில் 32 லட்சம் பேரும், டிக்­டொக்கில் 10 லட்சம் பேரும் அலி­காவை பின் தொடர்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

சொந்த மண்ணில் நடை­பெற்ற ஐரோப்­பிய மெய்­வல்­லுநர் சம்­பி­யன்ஷிப் போட்­டி­க­ளுக்குத் தெரிவு செய்­யப்­பட்­டதை அறிந்­த­வுடன் தான் ஆனந்த கண்ணீர் வடித்­த­தாக அலிகா தெரி­வித்தார்.

ஊட­கங்­க­ளுக்கும் அலிகா தொடர்­பான செய்­தி­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளித்­தன. எனினும், அவரால் பதக்கம் எத­னையும் வெல்ல முடி­ய­வில்லை. 

மக­ளி­ருக்­கான 400 மீற்றர் ஓட்­டத்தின் அரை இறு­தியில் அவர் கடைசி இடத்­தையே பெற்றார்.

எனினும் அதன்பின் நடை­பெற்ற 4 X 400 மீற்றர் அஞ்­ச­லோட்­டத்தின் இறு­திப்­போட்­டிக்கு ஜேர்­ம­னிய அணி தெரிவாகுவதற்கு அலிகா உதவினார்.  இறுதிப்போட்டியில் ஜேர்மனிய அணி 4 ஆவது இடத்தைப் பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right