ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளியான ரஷ்ய தத்துவஞானி அலெக்சாண்டர் டுகின் என்பவரின் மகள் தர்யா டுகினா அவர் பயணித்த கார் தீப்பற்றி எரிந்ததில் உயிரிழந்தார்.
மொஸ்கோ பிராந்தியத்தில் உள்ள ஓடிண்ட்சோவ்ஸ்கி மாவட்டத்தில் இவர் பயணம் செய்த கார் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது.
உயிரிழந்த தர்யா டுகினாவின் தந்தையான ரஷ்ய தத்துவஞானி அலெக்சாண்டர் டுகின் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளி ஆவார். புடினின் மூளை என்று அவர் வர்ணிக்கப்படுகிறார்.
ரஷ்ய தத்துவஞானி அலெக்சாண்டர் டுகினை இலக்குவைத்து இடம்பெற்ற சதி முயற்சியிலேயே அவரது மகள் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தர்யா டுகினா விபத்தில் கொல்லப்பட்ட காரிலேயே அலெக்சாண்டர் டுகின் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தார். எனினும் கடைசி நிமிடத்தில் அவர் தனியாக பயணம் செய்யும் முடிவை எடுத்தார் என ரஷ்ய ஊடகமான 112 தெரிவித்துள்ளது.
வாகனம் எரிந்து நொறுங்கிய இடத்திற்கு அவசர மீட்புக் குழுவினர் வருவதையும் காட்சிகளை டுகின் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருப்பதையும் டெலிகிராமில் வெளியாகியுள்ள வீடியோ காட்சிகளில் காண முடிகிறது.
எனினும் இந்தக் கார் விபத்து சம்பவம் குறித்து ரஷ்ய அதிகாரிகள் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM