அனைத்து அறவழி போராட்டக்காரர்களையும் விடுதலை செய்யுமாறுகோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

By Vishnu

21 Aug, 2022 | 03:45 PM
image

லெம்பேட்

பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய கோரியும், இலங்கையில் இடம்பெற்ற ஜனநாயக போராட்டங்களில் கலந்து கொண்ட போராட்டகாரர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும் வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்திற்கான ஒருங்கமைப்பில் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் பெற்றது.குறித்த போராட்டத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட தரப்பு தமிழர் என்ற வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் எனவும், ஜனநாயக அறவழிப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவ செயற்பாட்டாளர்கள், இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரியும், அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க கூடாது எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த போராட்டத்தில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு அங்கத்தவர்கள் வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு, மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் பெண்கள் குழுக்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் மன்னார் மெசிடோ நிறுவன அதிகாரிகள்,பாதிக்கப்பட்டவர்களுக்கான இணையத்தின் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அனைத்து அறவழி போராட்டக்காரர்களும் உடனடியாக விடுதலை செய்க,மாணவர் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க வேண்டாம் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டகாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கையளிப்பதற்கு என தயாரிக்கப்பட்ட பொது மகஜரும் போராட்டத்தின் போது வாசிக்கப்படமை குறிப்பிடத்தக்கது. 


முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ள எரிவாயு சிலிண்டர்...

2022-12-08 15:31:51
news-image

முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லவும் -...

2022-12-08 15:20:04
news-image

கோட்டாபய சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு அனுமதியளித்த விவகாரம்...

2022-12-08 15:35:50
news-image

கிராஞ்சி கடலட்டை பண்ணைக்கு எதிராக போராடிய...

2022-12-08 15:21:32
news-image

பொலிஸாரை மிரட்டி, வீடியோ காட்சிகளை சமூக...

2022-12-08 14:51:03
news-image

மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி...

2022-12-08 14:58:47
news-image

கணவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வரும் பெரும்பாலான...

2022-12-08 14:26:11
news-image

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு...

2022-12-08 14:19:05
news-image

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார்

2022-12-08 14:38:40
news-image

வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனத்தின் முன்...

2022-12-08 14:29:48
news-image

கொழும்பில் தீ விபத்து

2022-12-08 13:48:01
news-image

நாமலுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு

2022-12-08 13:37:40