அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயற்பாட்டளர்களை விடுதலை செய்யக்கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

Published By: Vishnu

21 Aug, 2022 | 03:47 PM
image

வடமலை ராஜ்குமார்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர் செயற்பாட்டளர்களை விடுதலை செய்யக் கோரி திருகோணமலை 3 ஆம் கட்டை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை வடக்கு கிழக்கு மனித உரிமைப் பாதுகாவலர்கள் சிவில் சமூக அமைப்புக்கள் பெண்கள் அமைப்புக்கள் இணைந்து 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்தினர்.

அத்துடன் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினையும் அனுப்பியுள்ளனர். 

ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரில் குறிப்பிட்டுள்ளதாவது,  

அனைத்துப் பல்கலைக கழக மாணவா  ஒன்றியத்தின் மாணவ செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க வேண்டாம்.

இலங்கையின் வடக்கு கிழக்கைச் சார்ந்த மனித உரிமைப் பாதுகாவலர்கள், சிவில் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து, மேதகு ஜனாதிபதியான தங்களிடம் 18 ஆவணி 2022 அன்று கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மாணவ செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் சார்ந்த எமது பகிரங்கக் கோரிக்கையை முன்வைக்கிறோம்.

ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் கருத்துத் தெரிவிப்பதற்கான சுதந்திரம் ஆகியன அரசியலமைப்பின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளாகும்.

இந்த உரிமைகளை பல்கலைக்கழக மாணவ செயற்பாட்டாளர்களும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்களும் தமது கோரிக்கைகளை தமது நாட்டின் சக பிரஜைகளுக்கும் அரசாங்கத்துக்கும் வெளிப்படுத்து வதற்காக பயன்படுத்தினர் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

தொழிற்சங்க நடடிவடிக்கைகளும் வெகுஜனப் போராட்டங்களும் பயங்கரவாத நடிவடிக்கைகள் அல்ல. மாணவ செயற்பாட்டாளார்கள் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.

எனவே, பல்கலைக்கழக மாணவ செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க வேண்டாமெனக் கோருகிறோம்.

இலங்கையில் ஜனாதிபதியே பாதுகாப்பு அமைச்சராவார். அவ்வகையில், எவரையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க கட்டளைப் பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

எனவே தங்களின் மேலான அதிகாரத்தைப் பயன்படுத்தி மாணவ செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கிழ் தடுத்து வைப்பதற்கான தடுப்புக் காவல் கட்டளைப் பத்திரத்தில் கைச்சாத்திட வேண்டாம் எனக் கோருகிறோம்.

 இலங்கையின் வடக்கு கிழக்கை சார்ந்த சிறுபான்மைத் தமிழர்களான நாம் தற்போதும் கொடூரமான பயகரவாதத் தடைச்சட்டத்தின் மனிதத்தன்மையற்ற துன்புறுத்தலை இன்றுவரை அனுபவித்து வருவதோடு, அச்சட்டத்தின் காட்டுமிராண்டித்தனமான சுபாவத்தினை நேரடியாக எதிர்கொண்ட அனுபவங்களும் எமக்கு உண்டு. பதின்ம வயதில் கைதுசெய்யப்பட்ட அப்பாவி தமிழ் இளைஞர்கள் 30 – 40 வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தை சிறையில் கழித்து வருகின்றனர். சிலர் வெளிச்சத்தைக் காணாது சிறைக்குள்ளேயே மாண்டுபோயினர்.

 இலங்கையின் சிறுபான்மை மக்களான எம்மைப் பொறுத்தவரையில், இந்நாட்டில் யாரும் இனிமேல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படக் கூடாது. அறவழிப் போராட்டக்காரர்கள் அனைவரையும் உடன் விடுவிக்குமாறு தங்களைக் கோருகிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04