கோப், கோபா குழுக்களில் சுயாதீன உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளடக்கப்படாமை குறித்து சர்வதேசத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளோம் - டலஸ்

Published By: Vishnu

21 Aug, 2022 | 06:15 PM
image

(எம்.மனோசித்ரா)

கோப் மற்றும் கோபா குழுக்களில் தற்போது பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்கள் உள்ளடக்கப்படாமை தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற சங்கம், சர்வதேச பாராளுமன்ற சங்கம் உள்ளிட்ட சர்வதேச சங்கங்களிடம் தெரியப்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அனைத்து தரப்பினரும் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திலேயே , இவ்வாறான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் டலஸ் அழகப்பெரும விசனம் வெளியிட்டார்.

அநுராதபுரத்தில் 20 ஆம் திகதி சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வகட்சி அரசாங்கத்திற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

எவ்வாறிருப்பினும் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் என்ன நடந்தது? பாராளுமன்ற குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களின் பெயர்கள் சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.

கோப் மற்றும் கோபா குழுக்களில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டிலான் பெரேரா உள்ளிட்டோர் அந்த குழுக்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட்டமையின் காரணமாக என்னை நீக்கியமை தொடர்பில் நான் ஆச்சரியமடையவில்லை.

கோப் குழுவின் தலைவராக செயற்பட்ட பேராசிரியர் சரித ஹேரத் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோப்குழுவிற்கான  உறுப்பினர்கள் பெயர்பட்டியலில், ஒரு உறுப்பினராகக் கூட அவரது பெயர் உள்ளடக்கப்படவில்லை.

பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற சங்கம், சர்வதேச பாராளுமன்ற சங்கம் உள்ளிட்ட சர்வதேச சங்கங்களிடம் நாம் இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளோம்.

அடிமை மனநிலையுடன் செயற்படுவதற்கு பதிலாக, எவ்வாறு புகழ்பெற்ற மனப்பான்மையை கட்டியெழுப்புவது எவ்வாறு என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

உறவினர் அரசியலை நிறைவுக் கொண்டு வந்து , தகுதிகளை அடிப்படையாகக் கொண்ட புதிய சமூகமொன்றை கட்டியெழுப்ப வேண்டும். அதே போன்று கட்சி அரசியல் வைரஸிலிருந்து இலங்கையை மீட்க வேண்டும். மேலும் ஊழலை முற்றாக துடைத்தெறிந்து , ஊழல்வாதிகளை தண்டிக்கக் கூடிய மனநிலைமையை உருவாக்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு தேசமாக நாம் முன்னேற சட்டத்துறை...

2023-06-04 17:55:42
news-image

தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது...

2023-06-04 17:20:57
news-image

புதிய வீட்டில் கோட்டாபய

2023-06-04 16:59:33
news-image

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு...

2023-06-04 17:00:40
news-image

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நான்கு...

2023-06-04 16:55:10
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி...

2023-06-04 17:02:10
news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02