சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் 40 நாட்களுக்கு தடையின்றி இடம்பெறும் - அமைச்சர் காஞ்சன

Published By: Digital Desk 5

21 Aug, 2022 | 02:31 PM
image

(எம்.மனோசித்ரா)

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் 100 000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கிடைக்கப் பெற்றதையடுத்து சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 120 000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கொண்ட கப்பல் இவ்வாரம் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் 40 தினங்களுக்கு எவ்வித தடையும் இன்றி சுத்தீகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுப்பர் டீசல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் உற்பத்தி முன்னெடுக்கப்படுவதில்லை என்றும் , ஒட்டோ டீசல், ஒக்டேன் 92 ரக பெற்றோல், கனரக எரிபொருள் எண்ணெய்/உலை எண்ணெய், ஜெட் எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் என்பனவே இங்கு உற்பத்தி செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலாங்கொடையில் நபரொருவர் அடித்துக் கொலை

2026-04-20 12:09:48
news-image

இந்திய வீடமைப்பு திட்டத்தை பார்வையிட்டார் இந்திய...

2026-04-20 12:08:08
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்...

2026-04-20 11:36:51
news-image

பயணிகள் பஸ்ஸில் மண்ணெண்ணெய் கடத்தல்: நடத்துனர்...

2026-04-20 10:46:52
news-image

புத்தாண்டு காலத்தில் மாகும்புர மத்திய நிலையத்தை...

2026-04-20 10:46:31
news-image

பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பம் :...

2026-04-20 10:36:54
news-image

இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை...

2026-04-20 10:43:59
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 608...

2026-04-20 10:11:35
news-image

தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்ட சந்தேகநபர்...

2026-04-20 09:52:43
news-image

03 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 09:38:17
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2026-04-20 08:56:35
news-image

தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள்...

2026-04-20 09:37:10