மாஸ்டர் மகேந்திரனாகவும், 'மாஸ்டர்' பட புகழ் மகேந்திரனாகவும் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய படமான 'அர்த்தம்' எனும் படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.
அறிமுக இயக்குநர் மணிகாந்த் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'அர்த்தம்'. இதில் மாஸ்டர் மகேந்திரன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ் நடித்திருக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், வினோத், அஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பவன் சென்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் காதல் மற்றும் ஹாரர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மினர்வா பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' காதலும், திகிலும் கலந்த திரைக்கதை. தமிழில் 70 சதவீதமும், தெலுங்கில் 30 சதவீதமும் படப்பிடிப்பு நடத்தினோம். தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகிலிருந்து நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.
ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் பதிப்பிற்கான வசனத்தை கீர்த்தி வாசன் எழுத, பாடல்களை முத்தமிழ் எழுதி இருக்கிறார்.
மாஸ்டர் மகேந்திரன் முழுமையான அர்ப்பணிப்புடன் இப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வெளியான பிறகு அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.
'அர்த்தம்' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. டீசரில் மாஸ்டர் மகேந்திரன் மற்றும் நாயகி ஷ்ரத்தா தாசின் தோற்றம் ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பிற்கு ஆளாக்கியிருக்கிறது. காதலும், ஹாரரும் கலந்த திரைப்படம் என்பதால் 'அர்த்தம்' படத்திற்கு திரையுலக வணிகர்களிடையேயும் ஆர்வம் எழுந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM