(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு 69 இலட்ச மக்களாணை இன்றும் செல்வாக்கில் உள்ளது.தேசிய அரசாங்கத்திற்கே அழைப்பு விடுத்துள்ளோம். நாட்டுக்காக எந்த அமைச்சினையும் பொறுப்பேற்க தயார் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவவிற்கும்,பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்குமிடையில் நேற்று முன்தினம் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியாவிடின் தேசிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். தேசிய அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ளும் தரப்பினருக்கு அமைச்சு பதவிகளில் முன்னுரிமையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சு பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு மிகுதியாக அமைச்சு பதவிகளை எமக்கு வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்வோம்.
நாட்டுக்காக எந்த அமைச்சினையும் பொறுப்பேற்க தயார்.தற்போதைய நெருக்கடியான நிலையில் இருந்து மீள்வது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கமே தற்போதும் உள்ளதால் அமைக்கப்படும் அரசாங்கம் குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம்.ராஜபக்ஷர்கள் தொடர்பில் ஒருசிலர் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளார்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு 69 இலட்ச மக்களாணை இன்றும் உள்ளது.தவறான அரசியல் பிரசாரங்கள் முரன்பாட்டை தோற்றுவித்துள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM