2030 வரை ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாக பதவி வகிப்பார் - பாலித ரங்கே பண்டார

Published By: Digital Desk 3

20 Aug, 2022 | 01:12 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் ஜனாதிபதியாக எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு வரை ரணில் விக்கிரமசிங்கவே பதவி வகிப்பார். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

எனவே சகல கட்சிகளும் எவ்வித பேதமும் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ரணில் விக்கிரமசிங்கவே எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாகவே பதவி வகிப்பார். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகிச் சென்று உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசியல் கட்சியும் இதுவரையில் வெற்றி பெற்றதில்லை. 

அதே போன்று எந்தவொரு அரசியல் தலைவரும் வெற்றியடைந்ததில்லை. ஐக்கிய மக்கள் சக்தி தொடர்பில் பேசுவது பிரயோசனமற்றது. ஏனைய கட்சிகளுக்கும் அதே நிலைமையே ஏற்படும்.

நாட்டில் பல்வேறு பௌத்த மகா சங்கங்கள் காணப்படுகின்ற போதிலும் , மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்கள் தொடர்பிலேயே அனைவரும் பேசுகின்றர். 

அதே போன்று தான் இலங்கையிலும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவை மாத்திரமே ஸ்திரமான கட்சிகளாகவுள்ளன. 

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனித்துச் செல்ல வேண்டிய தேவை கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணிக்க முடியும். 

எவ்வித பேதங்களும் இன்றி அனைவரையும் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

இன, மத, மொழி பேதமின்றி அனைவருடனும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமாகும். 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இந்நாட்டின் பிரஜையாவார். அவரது திறமையற்ற நிர்வாகம் மற்றும் பலவீனத்தின் காரணமாகவே நாடு இந்த நிலைமையை அடைந்துள்ளது.

எவ்வாறிருப்பினும் நாட்டின் பிரஜை என்ற ரீதியில் அவருக்கு இங்கு வசிப்பதற்கான உரிமை காணப்படுகிறது. அதற்கமைய நாட்டின் தலைவர்க என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு அனைத்து பிரஜைகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது.

அரசியலமைப்பிற்கமைய பிரஜைகள் உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு அரச தலைவர் நிர்பந்திக்கப்பட்டுள்ளார். அது கோட்டாபய ராஜபக்ஷவாகவும் இருக்கலாம். மஹிந்த ராஜபக்ஷவாகவும் இருக்கலாம். வேறு பிரஜைகளாகவும் இருக்கலாம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04
news-image

சிறுபான்மைக் கட்சிகளின் புதிய கூட்டணி எமக்குத்...

2026-07-17 14:35:02
news-image

ஊழியர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது...

2026-07-17 16:33:07