திருகோணமலையில் விபத்து : 3 பெண்கள் பரிதாபமாக பலி : பலர் காயம் !

By T. Saranya

20 Aug, 2022 | 12:25 PM
image

திருகோணமலை - மூதூர் பகுதியில் இன்று (20) உழவு இயந்திரமொன்று விபத்திற்குள்ளானதில் 3 பேர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மூதூர் பாச்சனூர் 64 ஆவது கட்டைப் பகுதியில் அமைந்துள்ள கொட்டியாரம் ரஜமஹா விகாரையில் சிரமதான நிகழ்விற்காக சென்ற உழவு இயந்திரம் வீதியைவிட்டு விலகி விபத்திற்குள்ளானது.

விபத்தின் போது குறித்த உழவு இயந்திரத்தில் 21 பேர் பயணித்துள்ளதாகவும், அதில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயங்களுக்குள்ளாகி உள்ளதாகவும், அவர்கள் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தோரின் சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைச்சுப்பதவிகளை அதிகரிக்க அரசாங்கத்திற்கு இருக்கும் உரிமை...

2022-12-09 17:21:08
news-image

இலங்கை உட்பட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் ...

2022-12-09 21:06:09
news-image

3 பில்லியன் டொலராக வெளிநாட்டு கையிருப்பை ...

2022-12-09 17:24:21
news-image

டயனா கமகே தொடர்பில் முன்வைத்த விமர்சனங்கள்...

2022-12-09 21:05:22
news-image

ஓய்வூதிய வயது 61 என்ற தீர்மானத்தை...

2022-12-09 13:43:10
news-image

ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட சொகுசு மெத்தை...

2022-12-09 17:12:08
news-image

பொருளாதாரச் சுமையை நாட்டு மக்கள் மீது...

2022-12-09 13:42:09
news-image

நீதிமன்ற பாதுகாப்பிலிருந்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய...

2022-12-09 19:47:17
news-image

புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்...

2022-12-09 16:38:53
news-image

கூட்டமைப்பினரை எதிர்த்தமைக்கான காரணத்தை தெரிவித்தார் உதய...

2022-12-09 11:32:18
news-image

காற்று மாசடைவில் கணிசமான மாற்றம் :...

2022-12-09 13:45:15
news-image

நாளை புயலாக மாறுகிறது மாண்டஸ் :...

2022-12-09 16:47:25