(ஜவ்பர்கான்)


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  மட்டக்களப்பு விஜயம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.


ஜனாதிபதி இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்து, மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் நிர்மானிக்கப்பட்டுள்ள புற்று நோய் வைத்தியசாலைக்கட்டிடம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிர்வாக கட்டிடம், மற்றும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றக் கட்டிடத் தொகுதி என்பவற்றை திறந்து வைக்கவிருந்தார்.
எனினும்  ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம் ரத்துச் செய்யப்பட்டு;ள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.
எனினும் திட்டமிட்ட படி மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் நிர்மானிக்கப்பட்டுள்ள புற்று நோய் வைத்தியசாலைக் கட்டிடம் மற்றும் ஏனையவை  திறந்து வைக்கப்படும் எனவும் சுகாhர அமைச்சர் ராஜிதசேனாரத்தின, பிரதியைமச்சர் பைசால் காசீம் உட்பட அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.இப்றாலெவ்வை தெரிவித்தார்.


கடந்த 27 ஆம் திகதி ஜனாதிபதி மட்டக்களப்புக்கு சமய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருந்த நிலையில்  மோசமான காலநிலை நிலவியதால் ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம் ரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.