(எம்.மனோசித்ரா)
இலங்கை மக்களின் அவசர மற்றும் நீண்ட காலத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு எவ்வாறு ஒன்றிணைந்து செயற்படுவது என்பது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்க் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன் போது நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக அமெரிக்கா நட்புறவையும் ஆதரவையும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதே வேளை எதிர்க்கட்சி தலைவருடனான இந்த சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க தூதுவர் , ' எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடுவதோடு, இலங்கை மக்களின் அவசர மற்றும் நீண்ட காலத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கையின் அனைத்துத் துறைகளும் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதற்கான கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.' என்று குறிப்பிட்டுள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM