அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய போராட்டத்தில் கைதான 16 பேருக்கு பிணை : ஜொஹான் அப்புஹாமிக்கு வெளிநாடு செல்லத் தடை

Published By: Digital Desk 4

19 Aug, 2022 | 08:05 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அனைத்து பல்கலைக்கழக மாணவர்  ஒன்றியத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்ட வேளையில் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 16 பேருக்கு கொழும்பு  மேலதிக நீதிவான் நீதிமன்றம்  இன்று  (19) பிணை   வழங்கியுள்ளது.

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களை கொம்பனி தெரு பொலிஸ் நிலைய பொலிஸார் கொழும்பு மேலதிக நீதிவான் டி.என் இலங்ககோன் முன் முன்னிலைப்படுத்தினர்.முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலனை செய்த நீதிவான் ஒரு சந்தேக நபருக்கு 5 இலட்சம் பெறுமதியான சரீர பிணை ஊடாக விடுவித்தார். பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில் மூன்று பௌத்த தேரர்களும் உள்ளடங்குகின்றனர்.

இதன்போது பொலிஸாரின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட மேலதிக நீதிவான் பொலிஸாரிடமிருந்து தப்பித்துச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படும் ஜொஹான் அப்புஹாமி என்பவர்  வெளிநாடு செல்வதற்கு தடையுத்தரவை பிறப்பித்தார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நேற்று முன்னெடுத்த போராட்டத்தை தொடர்ந்து அவர்கள் மீண்டும் ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதியமைச்சுக்குள் அத்துமீறிய வகையில் உள்நுழைய உள்ளதாக புலனாய்வு தகவல்; கிடைத்ததாக கொம்பனி தெரு பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

புலனாய்வு தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர்களில் பெரும்பாலானோர் நேற்று லிப்டன் சுற்றுவட்டத்தில் ஒன்று கூடி குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும்,பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கற்களை கொண்டு தாக்குதலை மேற்கொண்டதாகவும் பொலிஸார் மன்றில் குறிப்பிட்டனர்.

வன்முறையினை ஏற்படுத்தும் வகையில் குழப்பகரமாக செயற்பட வேண்டாம் என பொலிஸார் போராட்டகாரர்களுக்கு அறிவித்தும் அவர்கள் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட காரணத்தினால் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என பொலிஸார் மன்றில் மேலும் சுட்டிக்காட்டினார்கள்.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணை நிறைவு பெறாத காரணத்தினால் சந்தேக நபர்களை தடுப்பு காவலில் வைக்க அனுமதி வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

சந்தேக நபர்களுக்காக மன்றில் முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் விடயங்களை தெளிவுப்படுத்தி,பொலிஸார் பொய்யான விடயங்களை மன்றிற்கு சமர்ப்பித்து சந்தேக நபர்களை தடுப்பு காவலில் வைக்க முயற்சிப்பதாக குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டவர்கள் லிப்டன் சுற்றுவட்டத்தில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள் என குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கொம்பனி தெரு பகுதியில் இருந்து யூனியன் பிளேஸ் வரை போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டு வன்முறையான தன்மையில் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

பொரள்ளை,வோர்ட் பிளேஸ்,நாரஹேன்பிடிய ஆகிய பகுதிகளில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என மன்றில் குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஜனாதிபதி செயலகத்திற்கு உள்நுழைய முற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுவதன் ஊடாக அது பொய் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது என்றார்.

போராட்டத்தில் ஈடுப்படுவது அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி தனது சேவை பெறுநர் வன்முறையான முறையில் செயற்படவில்லை,மாறாக பொலிஸார் வன்முறையான வகையில் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

சந்தேக நபர் சார்பில் மன்றில் முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன சட்டத்தை முறையற்ற வகையில் செயற்படுத்தி பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதன்போது ஜொஹான் அப்புஹாமி சார்பில் மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி தனது சேவை பெறுநர் மருதானை பொலிஸ் நிலையத்திற்கு சென்றதாகவும்,அவரை கைது செய்வது அவசியமற்றது என மருதானை பொலிஸார் குறிப்பிட்டதாகவும் மன்றில் குறிப்பிட்டார்.

தனது சேவை பெறுநர் எந்நிலையிலும் பொலிஸாரால் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்துச் செல்லவில்லை என குறிப்பிட்ட சட்டத்தரணி அவர் தேவையான நேரத்தில் நீதிமன்றில் ஆஜராகுவார் எனவும் குறிப்பிட்டார்.

இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலனை செய்த நீதிவான் 16 பேரையும் பிணைவில் விடுவிப்பதாக அறிவித்து குறித்த வழக்கை எதிர்வரும் மாதம் 12ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளிலுள்ள ஆபத்தான கட்டிடங்கள் மற்றும் மரங்களை...

2023-12-11 21:18:06
news-image

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத்...

2023-12-11 20:57:33
news-image

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50...

2023-12-11 21:36:10
news-image

நியாயமான வரிக்கொள்கையையே எதிர்பார்க்கிறோம் - நாமல்

2023-12-11 18:26:32
news-image

இந்தியத் தூதரை சந்திக்க வடக்கு எம்.பி.க்களுக்கு...

2023-12-11 18:22:58
news-image

தமிழர்களை இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை...

2023-12-11 13:48:37
news-image

காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

2023-12-11 18:34:53
news-image

ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை :...

2023-12-11 18:31:27
news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17