நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதியுடன் மீண்டும் தீர்க்கமான கலந்துரையாடலில் ஈடுபடுவேன் - சஜித் 

By T Yuwaraj

19 Aug, 2022 | 09:35 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் விரைவில் மீண்டும் தீர்க்கமான கலந்துரையாடலில் ஈடுபட்டு, இணக்கப்பாட்டின் அடிப்படையில் நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பினை வழங்கத் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மறுசீரமைப்புகளுக்கான புத்திஜீவிகள் ஒன்றியத்தின் விசேட கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது. இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தேசிய சவாலை எதிர்கொள்வதற்காக , வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் , மறுசீரமைப்பதற்காகவும் நாம் தயாராகவுள்ளோம்.

எனவே ஜனாதிபதியுடன் மேலும் கலந்துரையாவதற்கு நாம் தயார். அதற்கமைய எதிர்வரும் சில தினங்களுக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தீர்க்கமான கலந்துரையாடலை முன்னெடுத்து , நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் , வழிமுறைகள் தொடர்பிலும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் எமது ஒத்துழைப்புக்களை வழங்க தயார்.

வேலைத்திட்டங்களுக்கே நாம் எமது ஒத்துழைப்புக்களை வழங்குவோம். அதிகளவான அமைச்சர்களை நியமித்தாலோ அல்லது அவர்களுக்கான சிறப்புரிமைகளுக்காக மக்கள் மீது வரிசுமையை சுமத்தினாலோ அவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு எம்மால் ஒத்துழைப்பு வழங்க முடியாது.

மாறாக இவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் அது மக்களால் முன்னெடுக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டங்களை காட்டிக் கொடுப்பதாகவே அமையும்.

தற்போதைய ஜனாதிபதி பதவியேற்பதற்கான வழியை உருவாக்கிக் கொடுத்தது , மக்களின் அந்த எழுச்சி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியையும் இரு ஆண்டுகளில் பதவி விலகச் செய்ததும் இந்த மக்கள் எழுச்சி போராட்டங்களே ஆகும்.

எனவே மக்களை மறந்து எம்மால் வேறு பயணத்தை மேற்கொள்ள முடியாது. நாம் மக்கள் சார்பாகவே நிற்போம். மாறாக பதவியேற்பவர் சார்பிலோ அல்லது பதவியை வழங்குபவர் சார்பிலோ அல்ல.

தனிநபர் அரசியலிலிருந்து விடுபட வேண்டும். தேசிய அரசியல் மற்றும் தேசிய இலக்கை இலக்காகக் கொண்டு நாம் எமது அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

இந்த முற்போக்கான பொறிமுறையின் கீழ் எமது வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். இதற்காக அமைச்சுப்பதவிகளை ஏற்பதற்கு நாம் தயாராக இல்லை. அமைச்சுப்பதவிகளை ஏற்பதால் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக...

2022-09-25 22:04:58
news-image

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு...

2022-09-25 23:37:25
news-image

இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து...

2022-09-25 21:47:45
news-image

பெரும்போக அறுவடையின் பின் அரிசி இறக்குமதிக்கான...

2022-09-25 21:21:38
news-image

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை

2022-09-25 22:41:21
news-image

காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில்...

2022-09-25 20:54:53
news-image

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

2022-09-25 21:57:16
news-image

நாட்டை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின்...

2022-09-25 16:50:48
news-image

ஜனாதிபதி நாளை ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு...

2022-09-25 16:50:00
news-image

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள், நாய்...

2022-09-25 17:01:53
news-image

உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து...

2022-09-25 16:44:50
news-image

மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் பலி

2022-09-25 15:04:57