இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கா டெலிகொம்மை தனியார் மயப்படுத்த எதிர்ப்பு - லக்ஷ்மன் கிரியெல்ல

Published By: Digital Desk 5

19 Aug, 2022 | 09:43 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கத்தின் தனியார் மயப்படுத்தும் நிறுவனங்களின் பட்டியலில் பாரியளவில் இலாபம் கிடைத்துவரும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் ஆகிய நிறுவனங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.

இலாபம் ஈட்டிவரும் நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அரச நிறுவனங்கள் சில வற்றை தனியார் மயப்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நட்டத்தில் செயற்படும் அரச நிறுவனங்கள் சிலவற்றை தனியார் மயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அதுதொடர்பான பட்டியல் ஒன்றும் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

பாரியளவில் தொடர்ந்து நட்டத்தில் இயங்கிவரும் நிறுவனங்களை தனியார் பயப்படுத்துவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை. அவ்வாறான நிறுவனங்களை தொடர்ந்து செயற்படுத்துவதன்மூலம் நாட்டுக்கு சுமையாகவே இருக்கும்.

ஆனால் தனியார் மயப்படுத்த இருக்கும் நிறுவனங்களின் பட்டியலில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் ஆகியனவும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இந்த இரண்டு நிறுவனங்களும் பாரியளவில் லாபமீட்டும் நிறுவனங்களாகும். அதனால் லாபமீட்டும் நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு. இதுதொடர்பில் பாராளுமன்றத்தில் எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம்.

அத்துடன் பாரியளவில் நட்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன் போன்ற நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது குறித்து எமக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. இவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ள முடியும்.

அத்துடன் நட்டமடையும் நிறுவனம் என்றாலும் அதனை தனியார் மயப்படுத்துவதாக இருந்தால் அதில் பணி புரியும் ஊழியர்களின் நிலை என்ன என்பது தொடர்பிலும் அவர்களுக்கு நட்டஈடு வழங்குவது போன்ற விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். அதேபோன்று மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்கவேண்டும்.

மேலும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் ஆகியன தனியார் மயப்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க த எக்கொனமிஸ்ட் சஞ்சிகைக்கு தெரிவித்திருக்கின்றார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33