வவுனியாவில் 15 வயது மாணவனை காணவில்லை

By T. Saranya

19 Aug, 2022 | 12:36 PM
image

(கே.பி.சதீஸ்)

வவுனியா, செக்கட்டிபுலவு பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயது மாணவன் ஒருவனை காணவில்லை என பூவரசங்குளம் பொலிஸில்  முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா, பம்பைமடு, செக்கட்டிபுலவு பகுதியில் வசித்து வந்த இராசேந்திரன் கிருபன் என்ற 15 வயது  மாணவனே 16 ஆம் திகதி அன்று அதிகாலை காணாமல் போயுள்ளார்.

குறித்த மாணவன் 16 திகதி அதிகாலை 1 மணியளவில் நித்திரையால் எழுந்து தண்ணீர் அருந்தியதாகவும் அதுவரை வீட்டில் இருந்ததனை அவதானித்ததாகவும் 16 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் எழுந்து பார்த்தபோது  மகன் காணாமல் போயுள்ளதாகவும் தாயார்   பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார் என காணாமல் போன மாணவனின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவன் வகுப்பிற்கு போகாததனால் அவரை தயார் 15ஆம் திகதி கண்டித்திருந்த நிலையில்  அதனாலேயே குறித்த மாணவன் காணாமல் போயிருப்பார் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. 

எனினும் இவ் விடயம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் குறித்த மாணவனை யாராவது அடையாளம் கண்டால் 0766922218, 0779987491 குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் குறித்த மாணவனின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரசவத்தின் போது வைத்திய பணிக் குழுவின்...

2022-09-30 09:20:19
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-09-30 08:58:20
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை அதிகரிக்கும்

2022-09-30 09:20:17
news-image

திருடர்களை பாதுகாக்கும் அமைப்பே தேசிய சபை...

2022-09-29 21:45:55
news-image

" தற்போதைய அடக்குமுறைகள் மனித உரிமைகள்...

2022-09-29 16:37:02
news-image

மனித உரிமை பேரவையின் தீர்மானம் நியாயமற்றது...

2022-09-29 21:21:18
news-image

பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அவதானம்...

2022-09-29 15:11:35
news-image

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம்...

2022-09-29 21:25:13
news-image

ஜனாதிபதி நாடு திரும்பியதும் அதி உயர்...

2022-09-29 21:19:57
news-image

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை...

2022-09-29 21:54:43
news-image

பின்தங்கிய கிராமங்களில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு குருதிச்சோகை -...

2022-09-29 21:22:50
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும்...

2022-09-29 21:25:57