ஜனாதிபதி ரணில் ஜப்பானுக்கு விஜயம்

Published By: Vishnu

19 Aug, 2022 | 02:29 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி கிரியையில் கலந்துக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சனிக்கிழமை ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜப்பான் அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியில் இடைநிறுத்தப்பட்ட ஜப்பானின் இலகு ரயில் அபிவிருத்தி செயற்திட்டத்தை மீள ஆரம்பிக்க அவதானம் செலுத்திவுள்ளார்.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த மாதம் 08 ஆம் திகதி பொது வெளியில்  இடம்பெற்ற அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போது துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்தார். அவரது இறுதி கிரியை அரச மரியாதையுடன் எதிர்வரும் 27 ஆம் திகதி ஜப்பானில் இடம்பெறவுள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி கிரியையில் கலந்துக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும்  26ஆம் திகதி ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிய முடிகிறது.

ஷின்சோ அபேவின் இறுதி கிரியையில் கலந்துக்கொள்ள ஜப்பானுக்கு வரும் அரச தலைவர்களுடனும், இராஜதந்திரிகளுடனும்,உயர்மட்ட தலைவர்களுடனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தையினை மேற்கொள்ளவுள்ளதாகவும், ஜப்பானின் நிதியுதவியுடன் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட இலகு ரயில் திட்டம் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியில் இடைநிறுத்தப்பட்டது.இந்த அபிவிருத்தி செயற்திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு ஜப்பான் அரசாங்கத்துடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

1.5 பில்லியன் டொலர் ஜப்பானிய நிதியுதவியுடனான இலகு ரயில் திட்டத்தை நிறுத்துமாறும்,திட்ட அலுவலகத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ 2020ஆம் ஆண்டு உரிய தரப்பினருக்கு அறிவித்ததை தொடர்ந்து இலகு ரயில் திட்டம் இடைநிறுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00