'கொடை' பட ஓடியோ வெளியீடு

By Digital Desk 5

19 Aug, 2022 | 02:33 PM
image

நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துவின் வாரிசான வாசன் கார்த்திக், தன் பெயரை கார்த்திக் சிங்கா என மாற்றியமைத்துக் கொண்டு நடித்திருக்கும் 'கொடை' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'கொடை'. இதில் கார்த்திக் சிங்கா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனயா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ரோபோ சங்கர், சிங்கமுத்து, அஜய் ரத்தினம், எம். எஸ். பாஸ்கர், மாரிமுத்து, போஸ் வெங்கட், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அர்ஜுனன் கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுபாஷ் கவி இசையமைத்திருக்கிறார்.

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் எஸ் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். பாண்டித்துரை தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' அனைத்து வயதினரும் படத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரத்துடன் தங்களை தொடர்பு கொள்ளும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

காதல், நகைச்சுவை, எக்சன், சென்டிமென்ட், பாடல்...என அனைத்து அம்சங்களுடன், இன்றைய இளம் தலைமுறையினர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் ஒன்றையும் சொல்லியிருக்கிறோம்'' என்றார்.

'மாமதுரை' மற்றும் 'அய்யன்' ஆகிய படங்களில் நடித்த நடிகர் சிங்கமுத்துவின் மகன் கார்த்திக் சிங்கா, சிறிய இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் இந்த படத்தில் அறிமுகமாவதால் கொடை படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்