மனை­வியின் பிறப்­பு­றுப்பை பசையில் ஒட்டி சீல் வைத்த நபர்

Published By: Vishnu

19 Aug, 2022 | 12:00 PM
image

கென்­யாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனை­வியின் பிறப்­பு­றுப்பை சுப்பர் குளூ ரக பசை­யினால் ஒட்டி சீல் வைத்­த­தாக குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது.

டெனிஸ் முமோ எனும் நபர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

2020 ஆம் ஆண்டில் தொழில் விட­ய­மாக ருவாண்­டா­வுக்கு தான் செல்­வ­தற்கு முன்னர், தனது மனை­வியின் பிறப்­பு­றுப்பை இவ்­வாறு பசையில் ஒட்டி சீல் வைத்­து­விட்டுச் சென்றார் என குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

வேறு ஆண்­க­ளு­டன மனைவிக்கு இர­க­சிய தொடர்­புகள் இருப்­ப­தாக கரு­தி­யதால் தான் இவ்­வாறு செய்­த­தாக பொலி­ஸா­ரிடம் டெனிஸ் முமோ கூறி­யுள்ளார். 

தனது மனை­வியின் சமூக வலைத்­தள தகவல் பரி­மாற்­றங்­களை ஆராய்ந்­த­போது இதனை தான் அறிந்­து­கொண்­ட­தாக அவர் கூறி­யுள்ளார். 

தான் வேலை நிமித்­த­மாக வெளி­யூ­ருக்குச் சென்­ற­பின்னர் அந்த ஆண்­களை தனது மனைவி சந்­திக்­கக்­கூடும் என டெனிஸ் முமோ கூறி­யுள்ளார். 

டெனிஸ் முமோவின் மனை­வியின் பிறப்­பு­றப்பில் பசை ஒட்­டப்­பட்­டதால் அப்பெண் கடு­மை­யான உபா­தை­க­ளுக்கு உள்­ளானார். கழி­வ­றைக்கும் செல்ல முடி­யாமல் தவித்த அவர் வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்டார். 

இச்­சம்­ப­வத்­தை­யடுத்து டெனிஸ் முமோ பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். அவரை பொலிஸார் விசா­ரித்­த­போது இக்­குற்­றத்தை அவர் ஒப்­புக்­கொண்டார். தனது மனை­வியை தான் நேசிப்­ப­தா­கவும் அவர் தன்­னை­விட்டு சென்­று­விடக் கூடாது என்­ப­தற்­கா­கவே இவ்­வாறு தான் செய்­த­தாக கூறினார் எனவும் உள்ளூர் ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

டெனிஸ் முமோ­வுக்கு எதி­ராக குடும்ப வன்­முறை உட்­பட பல்­வேறு குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. 

இதே­வேளை, திரு­ம­ணத்­துக்குப் புறம்­பாக வேறு ஆண்­க­ளுடன் பாலியல் உறவு கொண்­ட­தாக அவரின் மனைவி மீதும் குற்­றச்­சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுக்காக அப்பெண்ணுக்கு 100 கசையடிகள் வழங்க வேண்டும் என அப்பெண்ணின் கணவரின் சட்டத்தரணிகள், நீதிமன்றிடம் கோரியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right