சிறையில் அடைக்கப்பட்ட கைதியுடன் முத்தமிட்டபோது அக்கைதிக்கு இரகசியமாக போதைப்பொருள் பரிமாறியதாகக் கூறப்படும் பெண்ணொருவர் கொலைக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ரசெல் டொலார்ட் எனும் 33 வயது பெண் மீதே இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
டென்னஸி மாநிலத்தின் சிறைச்சாலையொன்றில் அடைக்கப்பட்டிருந்த ஜோசுவா பிரவுண் எனும் கைதியை பார்வையிடுவதற்கு ரசெல் டொலார்ட் சென்றிருந்தார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக 11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் ஜோசுவா பிரவுண்.
சிறைச்சாiயில் சந்தித்தபோது ஜோசுவா பிரவுணும் ரசெல் டொலார்ட்டும் முத்தமிட்டுக் கொண்டனர். இதன்போது போதைப்பொருளை இரகசியமாக ஜோசுவா பிரவுணுக்கு ரசெல் டொலார்ட் பரிமாறியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதன்பின் போதைப்பொருள் அடங்கிய பலூன் ஒன்றை விழுங்கிய ஜோசுவா பிரவுண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இந்நிலையில்இ ரசெல் டொலார்ட் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை சிறைச்சாலைக்கு கொண்டுவந்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருவதன் அபாயத்தையும் அதன் பின் விளைவுகளையும் மேற்படி சம்பவம் உணர்த்துகிறது என டென்னஸி மாநில சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM