படகு பழு­த­டைந்­ததால் திரு­மண வைபத்­துக்கு செல்ல முடி­யாமல் தவித்த மண­ம­க­னை­பொலிஸ் படகில் ஏற்றிச் சென்ற அதி­கா­ரிகள்

By Vishnu

19 Aug, 2022 | 10:27 AM
image

அமெ­ரிக்­காவின் பொஸ்டன் நகரில் படகு பழு­த­டைந்­ததால் தனது திரு­ம­ண­வை­பவம் நடை­பெறும் இடத்­துக்கு செல்­ல­மு­டி­யாமல் தவித்த மண­மகன் ஒருவi ரபொஸ்டன் பொலிஸார் தமது உத்­தி­யோ­க­பூர்வ படகில் உரிய இடத்­துக்­கு­ஏற்றிச் சென்­றனர்.

பட்றிக் மஹோனி எனும் இளை­ஞரின் திரு­மண வைப­வத்தை பொஸ்டன் துறை­மு­கத்­துக்கு மத்­தி­யி­லுள்ள தொம்சன் தீவில் நடத்தத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

மண­மகள் ஏற்­கெ­னவே அத்­தீ­வுக்குச் சென்று காத்­தி­ருந்தார். ஆனால், மண­மகன் பய­ணிக்­க­வி­ருந்த படகு பழு­த­டைந்­து­விட்­டது.

மண­மகன் தோழர்கள், புகைப்­ப­டக்­க­லைஞர், மலர் அலங்­கார ஏற்­பாட்­டா­ளர்கள் ஆகி­யோரும் தொம்ஸன் தீவுக்­கு­செல்­ல­மு­டி­யாமல் தவித்­தனர்.

இந்­நி­லையில் பொலிஸ் அதி­காரி மெத்திவ்ஸ், பொஸ்டன் பொலிஸ் துறை­முக ரோந்துப் படகு ஒன்றில் மண­மகன் மற்றும் அவரைச் சார்ந்த 12 பேரை தொம்ஸன் தீவுக்கு அழைத்துச் சென்றார். 

இதன்­மூலம், பட்றிக் மஹோ­னியின் திரு­ம­ண­வை­பவம் திட்­ட­மிட்­ட­படி நடை­பெற்­றது.

பொலிஸ் அதி­கா­ரி­யுடன் மண­மக்­க­ளுடன்  பிடித்துக் கொண்ட புகைப்­ப­டத்­தையும் பொஸ்டன் பொலிஸார் தமது இணை­யத்­த­ளத்தில் வெளி­யிட்­டுள்­ளனர்.

தமது திரு­ம­ணத்தை திட்­ட­மிட்­ட­படி நடத்த உத­விய பொலி­ஸா­ருக்கு பட்றிக் மஹோனி நன்றி தெரி­வித்­துள்ளார்.

இதேவேளை, அவர்களுக்கு உதவ முடிந்ததால் பொலிஸார் மகிழ்ச்சியடைகின்றனர் என பொலிஸ் அதிகாரி மெத்திவ்ஸ் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிக நீளமான காதுமுடி வளர்த்து கின்னஸ்...

2022-12-02 16:13:17
news-image

தாயில்லா ஆட்டுக் குட்டிகளுக்கு தாயாக மாறி...

2022-11-30 20:56:56
news-image

3 கிலோ தலைமுடியை உட்கொண்ட சிறுமி...

2022-11-30 11:47:48
news-image

தேவாலயமொன்றின் அனைத்து பிக்குகளும் போதைப்பொருள் சோதனையில்...

2022-11-30 10:17:35
news-image

எகிப்தில் தங்க நாக்கு கொண்ட மம்மிகள்...

2022-11-29 17:30:21
news-image

ஓநாய் போன்று காட்சியளிக்கும் இளைஞன் -...

2022-11-29 14:48:10
news-image

நபரின் வயிற்றிலிருந்த 187 நாணயங்களை அறுவை...

2022-11-29 13:19:19
news-image

அவுஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாணமாக திரண்ட கூட்டம்...

2022-11-27 15:57:42
news-image

140 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்ட பறவை...

2022-11-28 09:09:26
news-image

உல்லாசக் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த இளைஞர்...

2022-11-26 19:50:58
news-image

வரலாற்றில் இன்று - மிரபால் சகோதரிகள்...

2022-11-25 13:00:05
news-image

195 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக...

2022-11-24 18:27:49