ஆப்கானிஸ்தானில்,மசார்-இ-ஷரிப் நகரில் அமைந்துள்ள ஜேர்மன் தூதரகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் காயமடைந்த 80 பேருக்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த குண்டு வெடிப்பை தொடர்ந்து பலமுறை துப்பாக்கிக்சூடும் இடம்பெற்றுள்ளது.

இத் தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.