தேசியக் கல்வியற் கல்லூரி விண்ணப்பம் கோரலில் சப்ரகமுவ மாகாண மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் செந்தில் தொண்டமான் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, இப்பிரச்சினைக்கு சாதகமான முடிவுகள் எட்டப்பட்டப்பட்டுள்ளன.
தேசிய டிப்ளோமா பாடநெறியைப் பயில்வதற்காக 2019 ஆம் ஆண்டு மற்றும் 2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் பயிலுனர்களின் இரு தொகுதியினரை ஒரே தடவையில் தேசியக் கல்வியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கும் வர்த்தமானி அறிவித்தலில் சப்ரகமுவ மாகாண மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, இ.தொ.கா உபசெயலாளர் ரூபன் பெருமாள், இ.தொ.கா உபதலைவர் பாஸ்கர் உட்பட கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களை சேர்ந்த தமிழ்மொழி மூல பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் புத்திஜீவிகளால் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க பெற்றுள்ளது.
அதற்கமைய கல்வியைச்சரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் கல்வி அமைச்சின் ஆசிரியக் கல்விக்கான ஆணையாளர், பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையே விஷேட கலந்துரையாடல் கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
வர்த்தமானி பிரகாரம் ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரிக்கான விசேட நிபந்தனையின் அடிப்படையில் தமிழ்மொழி மூலம் 295பேரும் சிங்கள மொழியில் 120 பேரும் ஆங்கில மொழிமூலம் 20பேரும் உள்ளடங்குகின்றனர். இதன் அடிப்படையில் இவ்விண்ணப்பக் கோரலில் சப்ரகமுவ மாகாணத்தை சேர்ந்த இரத்தினப்புரி, கேகாலை ஆகிய மாவட்ட மாணவர்கள் 56 பேருக்கு மாத்திரமே வாய்ப்பு உள்ளது அநீதியாகும். அடுத்ததாக நாடளாவிய ரீதியில் ஸ்ரீபாத கல்லூரி அல்லாத ஏனைய கல்வியற் கல்லூரிகளுக்கு கோரப்பட்டுள்ள 1630 பேரில் கேகாலைக்கு 3 பேருக்கும், இரத்தினபுரிக்கு 21பேருக்கும் மாத்திரமே வாய்ப்பு உள்ளது. இதன் அடிப்படையில் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது சப்ரகமுவ மாகாண மாணவர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
எனவே இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என செந்தில் தொண்டமான் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கையின் பிரகாரம் 10 வீத அதிகரிப்பான 45 விண்ணப்பதாரிகளுக்கு வாய்ப்பு வழங்குவதாக கல்வி அமைச்சர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM