எங்களை விட்டுவிடுங்கள்; எங்காவது போய் விடுகிறோம் – சிம்புவின் தாய் உருக்கம் 

என் மகனை தூக்­கி­லிட வேண்டும் என்­கி­றீர்கள். தூக்கில் போடு­ம­ளவு என் மகன் என்ன செய்தான். உங்­க­ளுக்கு என் பையன் தானே வேண்டும், எந்த பொலி­ஸிடம் வேண்­டு­மா­னாலும் ஒப்­ப­டைக்­கிறோம் எடுத்­துக்­கொள்­ளுங்கள்.எங்­களை விட்­டு­வி­டுங்கள். தமிழ்­நாட்டை விட்டு சென்று வேறு எங்­கா­வது போய் பிழைத்து கொள்­ளு­கின்றோம் என்று சிம்­புவின் தயார் உஷா ராஜேந்தர் தெரி­வித்­துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

'பீப் பாடல்' திரு­டப்­பட்ட பாடல், அதனை வெளி­யிட்டு என் மகன் சிம்பு கலைத்­து­றையில் வள­ரக்­கூ­டாது என்று பொறா­மையில் செயல்­ப­டு­கின்­றனர். என் குடும்­பத்­தி­ன­ருக்கு இனியும் தொந்­த­ரவு கொடுத்தால் தமி­ழ­கத்தை விட்டு வெளி­யே­று­வ­தைத்த தவிர வேறு வழி­யில்லை

இந்த சினி­மாவில் நாங்கள் கஷ்­டப்­பட்டு ஜெயித்­தி­ருக்­கிறோம். பீப் பாடல் பெண்­களின் மனதை புண்­ப­டுத்­தி­யி­ருந்தால் நாங்கள் வருத்தம் தெரி­விக்­கிறோம். நாங்கள் இதை வெளி­யிட்­ட­வர்­களை கண்­டு­பி­டிக்கச் சொல்லி முறைப்­பாடு கொடுத்தோம். அதன் மீது எந்த நட­வ­டிக்­கையும் இல்லை. ஆனால், சிம்­புவின் மீது வழக்­குப்­ப­திவு செய்து விரட்­டு­கின்­றனர். சிம்பு என்ன குற்றம் செய்தார்? பொது­நி­கழ்ச்­சி­யிலோ, படங்­க­ளிலோ, பேட்­டி­யிலோ ஏதா­வது சொல்­லி­யி­ருக்­கி­றாரா? எது­வுமே இல்லை. அவரோ சின்ன பையன், அவ­ருக்கு இன்னும் திரு­மணம் கூட ஆக­வில்லை. வீட்டில் நண்­பர்­க­ளுடன் விளை­யாட்­டாக பண்­ணிய பாடல், அதுவும் 'பீப்' போடப்­பட்டு இறு­தியில் தேவை­யில்லை என்று தூக்கிப் போடப்­பட்ட பாடல். அதை என்­னமோ பெரிய குற்றம் பண்­ணி­விட்­டது போல, எந்த நேரமும் வீட்டின் முன்பு பொலிஸ் இருக்­கி­றது. எங்­க­ளுக்கு நிம்­ம­தி­யில்லை 24 மணி நேரமும் வீட்டின் முன்பு கமெரா வும் கையு­மாக ஆட்கள் இருந்தால் எங்­க­ளுக்கு என்ன நிம்­மதி இருக்­கி­றது.

பொலிஸ் தேடும் அள­வுக்கு சிம்பு என்ன தவறு பண்­ணினார், அப்­ப­டியே தேடி­னாலும் தமிழ்­நாட்டை விட்டோ, இந்­தியாவை விட்டோ எங்­கேயும் ஒட­வில்லை. உங்­க­ளுக்கு என் பையன் தானே வேண்டும், எந்த பொலி­ஸிடம் வேண்­டு­மா­னாலும் ஒப்­ப­டைக்­கிறோம் எடுத்துக் கொள்­ளுங்கள்.

எங்கள் பக்கம் இருக்கும் நியா­யத்தை யாருமே சொல்­ல­மாட்டேன் என்­கி­றார்கள். இது திரு­டப்­பட்ட ஒரு பாடல், தூக்கி எறி­யப்­பட்ட ஒரு பாடல், 'பீப்' சத்தம் போட்டு மறைக்­கப்­பட்ட ஒரு பாடல். அதை வெளி­யிட்டு இப்­படி தொந்­த­ரவு கொடுக்­கின்­றனர்.

நாட்டில் எத்­த­னையோ பேர் கஷ்­டப்­ப­டு­கின்­றனர். அவர்­க­ளுக்கு உதவி செய்­வதை விட்டு விட்டு ஏன் சிம்­புவை இப்­படி தொந்­த­ரவு செய்­கின்­றனர் என்று தெரி­ய­வில்லை. சிம்­புவை பொலிஸ் தேடினால் அவர் பொலிஸில் சர­ண­டைந்து விடுவார். அதற்­காக மீடி­யாக்கள் ஏன் இப்­படி எங்கள் வீட்டு முன்பு காத்­தி­ருக்க வேண்டும்? எங்­க­ளுக்கு மன உளைச்­ச­லாக இருக்­கி­றது.

உங்­க­ளுக்கு என்ன தான் வேண்டும். என் பைய­னோட உயிர் வேண்­டுமா? ,

எடுத்துக் கொள்­ளுங்கள். இல்­லை­யென்றால் அந்த பையனை வளர்த்த என்­னோட உயிரை எடுத்துக்கொள்­ளுங்கள். தூக்கில் போட வேண்­டுமா?

வீட்டில் சாப்­பிட முடி­ய­வில்லை, தூங்க முடி­ய­வில்லை, வெளியே வர முடி­ய­வில்லை.சொந்த வீட்டின் வாசலில் என்னால் கோலம் போட முடி­ய­வில்லை, அவ்­வ­ளவு மன உளைச்­ச­லுக்கு ஆளாகி இருக்­கிறோம் எந்த நேரம் பார்த்­தாலும் கமெராவும்கையு­மா­கவே இருக்­கி­றார்கள். எனக்கு இந்த தமிழ்­நாடே வேண்டாம். எங்­களை விட்­டு­வி­டுங்கள் நாங்கள் எங்­கே­யா­வது சென்று விடு­கிறோம்.

என் கணவர் மூன்று முதல்­வர்களை எதிர்த்து நின்­றி­ருக்­கிறார் அர­சியல் ரீதி­யாக எத்­த­னையோ கஷ்­டங்­களை தாங்கி நின்­றி­ருக்­கிறோம். ஒன்­று­மில்­லாத பிரச்­சி­னைக்கு இப்­படி ஏன் தொந்­த­ரவு கொடுக்­கின்­றனர் என்று தெரி­ய­வில்லை.

சிலம்­ப­ர­சனை தூக்கில் போட வேண்டும் என்­கி­றார்கள். அந்த பையன் தூக்கில் போடும் அள­வுக்கு என்­னங்க பண்­ணிட்டான். அந்த பையனை வளர்ந்­தவள் நான். என்னை தூக்கில் போடுங்கள். என் மகன் தவறு பண்­ணி­யி­ருந்தால், என்னை தூக்கில் போடுங்கள்.

நன்றி சிம்பு ஒரு சாதா­ரண நடிகன். பத்து நடி­க­ரோடு அவரும் ஒரு நடிகர். இப்­படி கிழி கிழி என்று கிழிப்­ப­தற்கு அவர் என்ன பண்ணிவிட்டார். எங்கள் குடும்பத்தோட நிம்மதியே போய்விட்டது. தமிழ்நாடே வேண்டாம், கர்நாடகா, கேரளா எங்கேயாவது போய் எங்களது பிழைப்பைத் தேடிக் கொள்கிறோம். எங்களை வாழவைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கண்ணீர் மல்க சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.