உலகளவில் ஒரு இலட்சம் பேரில் 670 க்கும் மேற்பட்டவர்கள் இரத்த சிவப்பணுக்கள் கோளாறுகளினால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு தற்போது புதிய வகையினதான சிகிச்சைகள் அறிமுகமாகி இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய உடலில் நுரையீரல் பகுதியிலிருந்து உடல் முழுவதற்கும் ஆற்றலுக்குத் தேவையான ஓக்சிஜனை எடுத்துச் செல்வதில் இரத்த சிவப்பணுக்கள் முக்கிய பங்களிப்பினை அளிக்கின்றன. எம்முடைய எலும்பு மஜ்ஜையிலிருந்து உற்பத்தியாகும் இரத்த சிவப்பணுக்கள் 100 முதல் 120 நாட்கள் வரை ஆரோக்கியமாக இயங்கும் தன்மை கொண்டவை. ரத்த சிவப்பணுக்கள் முழுமையான வடிவத்திலும், தேவைக்கு ஏற்ற அடர்த்தியிலும் உற்பத்தியானால் எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இதற்கு மாறாக இரத்த சிவப்பணுக்களின் வடிவம், அமைப்பு, அதன் செயல் திறன் ஆகியவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், ரத்த சோகை உள்ளிட்ட பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் நுரையீரல், மண்ணீரல், பித்தப்பை ஆகியவற்றிலும் பாதிப்பை உண்டாக்குகிறது.
அதீத சோர்வு, தோல், கைகள், உதடுகள் போன்றவை வெளிறிக் காணப்படுவது, எரிச்சல் ஏற்படுவது, உடலுக்கு தேவையான சக்தியில் குறைபாடு ஏற்படுவது.. போன்ற அறிகுறிகளையும், சிலருக்கு மஞ்சள் காமாலை, மண்ணீரல் வீக்கம், பித்தப்பை கற்கள் போன்ற அறிகுறியையும் ரத்த சிவப்பணு கோளாறுகள் ஏற்படுத்துகிறது.
இரத்த சிவப்பணுக்களில் ஏற்படும் பிறழ்வு காரணமாகவும், அதன் மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் காரணமாகவும், ஒரு சில மருந்துகளின் பக்க விளைவு காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் ஆர்பிசி எனப்படும் ரத்த சிவப்பணுக்கள் கோளாறு, பல்வேறு குறைபாட்டின் காரணமாக உண்டாகிறது.
இரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, சிடி ஸ்கேன் பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வர். பிறகு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இவை ஏற்பட்டிருந்தால், அதற்குரிய பிரத்யேக ஊட்டசத்து அடங்கிய உணவினை சிகிச்சையாக பரிந்துரைப்பார்கள். சிலருக்கு மண்ணீரல் வீக்கம் காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தால், முழு அளவிலான பரிசோதனையை மேற்கொண்ட பின், மண்ணீரலை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி, இதற்கு முழுமையான நிவாரணம் வழங்குவர். மேலும் சிலருக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுவதற்கான ஸ்டீராய்டு மருந்துகளை வழங்கி நிவாரணத்தை மேற்கொள்வர். வெகு சிலருக்கு ரத்தப் பரிமாற்ற சுழற்சி என்ற சிகிச்சையை அளித்து, இதிலிருந்து முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.
டொக்டர் பி. முத்துக்குமார்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM