2026 ஐ.சி.சி. இருபது - 20 உலகக் கிண்ணம் - இந்தியாவும் இலங்கையும் கூட்டாக நடத்தும்

Published By: Vishnu

18 Aug, 2022 | 09:24 PM
image

(என்.வீ.ஏ.)

2026ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியை இந்தியாவும் இலங்கையும் கூட்டாக நடத்தவுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள 2023 முதல் 2027 வரையான நான்கு வருட பருவகால சுழற்சிக்கான எதிர்கால சுற்றுப்பயண திட்டத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

2011 இல் இலங்கையும் 2016 இல் இந்தியாவும் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை வரவேற்பு நாடுகளாக முன்னின்று தனித்தனியாக நடத்தியிருந்தன.

இன்னும் 4 வருடங்களில் இந்த இரண்டு நாடுகளும் அப் போட்டியை கூட்டாக நடத்தவுள்ளன.

எதிர்கால சுற்றுப்பயண திட்டத்திற்கு அமைய 2023 முதல் 2027 வரை 2026 இருபது 20 உலகக் கிண்ணப் போட்டி உட்பட ஐந்து பிரதான ஐ.சி.சி. கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

அவற்றில் முதலாவது போட்டி நிகழ்ச்சியான ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இந்தியாவில் 2023இல் நடைபெறவுள்ளது.

1987, 1996, 2011 ஆகிய 3 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் கூட்டாக நடத்திய இந்தியா, முதல் தடவையாக 2025 இல் தனி நாடாக உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ளது.

அதனைத் தொடர்ந்து 2024 இல் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை மேற்கிந்தியத் தீவுகளும் ஐக்கிய அமெரிக்காவும் கூட்டாக நடத்தவுள்ளன. ஐசிசி உலக கிரிக்கெட் போட்டி ஒன்றை ஐக்கிய அமெரிக்கா நடத்தவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

உலக கிரிக்கெட் அரங்கில் கடைசியாக 2017இல் நடத்தப்பட்ட ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி மீண்டும் 2025 இல் அரங்கேற்றப்பட்டவுள்ளது. அப் போட்டியை பாகிஸ்தான் அரங்கேற்றவுள்ளது.

1996இல் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுடன் கூட்டிணைந்து உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்திய பாகிஸ்தான், 30 வருடங்களின் பின்னர் ஐசிசி உலக கிரிக்கெட் சுற்றுப் போட்டியை அரங்கேற்றவிருப்பது விசேட அம்சமாகும்.

2009இல் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாதுகாப்பை காரணம் காட்டி கிரிக்கெட் விளையாடும் பிரதான நாடுகள் பாகிஸ்தானுக்கு செல்லத் தயங்கின. இதன் காரணமாக பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் பல வருடங்களாக இடம்பெறவில்லை. ஆனால், கடந்த மூன்று வருடங்களில் பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுவருவதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஐசிசி சம்பியன்ஷிப் போட்டியை நடத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

எதிர்கால சுற்றுப்பயண திட்டத்தின் 2023 - 2027க்கான நான்கு வருட கிரிக்கெட் பருவகால சுழற்சி 2027இல் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டியுடன் நிறைவுபெறுகிறது. 2027 ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை தென் ஆபிரிக்கா, ஸிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகள் கூட்டாக நடத்தவுள்ளன.

இந்த பருவகால சுழற்சியில் விளையாடப்படும் இருதரப்பு மற்றும் முத்தரப்பு சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஐசிசி போட்டி நிகழ்ச்சிகளுக்கான தரநிலைப்படுத்தல் போட்டிகளாக அமைவதால் அவை ஒவ்வொரு நாட்டிற்கும் முக்கியம் வாய்ந்தவையாக அமையவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது ஒருநாள் கிரிக்கெட்...

2025-11-12 01:04:48
news-image

இலங்கை விளையாட்டுத்துறையில் சிறந்த ஆளுமைக்கான சீர்திருத்தம்...

2025-11-11 20:19:35
news-image

இலங்கையின் வெற்றி இலக்கு 300 ஓட்டங்கள்; ...

2025-11-11 20:07:43
news-image

11இன் கீழ் சிறுவர்களுக்கான உலக மேசைப்பந்தாட்ட...

2025-11-11 16:58:48
news-image

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகமானார்...

2025-11-11 16:06:20
news-image

முதல்தர கிரிக்கெட்டில் மேகாலயா வீரர் ஆகாஷ்...

2025-11-11 14:20:09
news-image

பாகிஸ்தானின் சவால்களை கச்சிதமாக எதிர்கொண்டு வெற்றிபெற...

2025-11-11 08:51:14
news-image

மத்திய ஆசிய 19 வயதின் கீழ்...

2025-11-10 18:31:18
news-image

போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது...

2025-11-10 17:53:30
news-image

ஒலிம்பிக்கில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்...

2025-11-10 17:27:48
news-image

ஹொங்கொங் சிக்சஸ் கோப்பைப் பிரிவில் ஹொங்கொங்...

2025-11-10 12:38:02
news-image

ஹொங்கொங் சிக்சஸ் கிரிக்கெட்டில் பிரதான கிண்ணப்...

2025-11-10 11:44:35