மிரிஹான தடுப்பு முகாமிலிருந்து தப்பியோடிய இந்திய பிரஜைகள் ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த இந்திய பிரஜைகள் மன்னார் - பேசாலை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிரிஹான தடுப்பு முகாமில் சிறுநீரக மோசடி தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இந்திய பிரஜைகள் தப்பிச்சென்றதாக கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டியவிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த இந்திய பிரஜைகளை கைதுசெய்யுமாறு கொழும்பு பிரதம நீதவான் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகபர் என கூறப்படும் சுரேஷ் லக்ஷ்மன் குமார் என்பவர் 6 இந்திய பிரஜைகள் தப்பிச்செல்வதற்கு முன்பாக தப்பிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.