(எம்.எப்.எம்.பஸீர்)
காலி முகத்திடல் போராட்டத்துக்கு உதவி ஒத்தாசை வழங்கும் வகையில் செயற்பட்டதாக கூறப்படும் பிரித்தானிய யுவதி கிளீ பிரேஸரின் (Kayleigh Fraser) வீசா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்தது.
குறித்த யுவதிக்கு நாட்டிலிருந்து வெளியேறுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ள நிலையில், அவ்வுத்தரவை வலுவிழக்கச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்காமல் நீதிமன்றம் கடந்த 16 ஆம் திகதி தள்ளுபடி செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்தே குறித்த யுவதி காணாமல் போயுள்ளதாகவும், அவர் தங்கியிருந்த இடங்களில் அவர் இல்லை எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இது தொடர்பில் வீரகேசரியிடம் பேசிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் பியூமி பண்டார, ' குறித்த யுவதியின் வீசா காலம் கடந்த 15 ஆம் திகதியுடன் முடிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையில் வீசா இன்றி தங்கியிருப்பது குற்றமாகும். அவரை தேடி பல இடங்களில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் அவர் அந்த இடங்களில் இருக்கவில்லை. எனவே குடிவரவு குடியகல்வு திணைக்களம் அவரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யவோ அல்லது தடுப்பு முகாமில் வைக்கவோ நடவடிக்கை எடுக்கும்.' என தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் குறித்த பிரித்தனைய யுவதி தொடர்பில் சுமார் 36 மணி நேரத்துக்கும் அதிகமாக எந்த தகவல்களும் வெளிப்படுத்தப்படாத நிலையில், அவரைத் தேடிய நடவடிக்கைகலளுக்கு சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் உதவியும் பெறப்பட்டுள்ளது.
இதுவரை குறித்த யுவதி நாட்டைவிட்டு வெளியேறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரைத் தேடி சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவொன்றும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM