(நா.தனுஜா)
இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அமைப்புக்கள், நிதியுதவிகள் மற்றும் ஒத்துழைப்புச்செயற்திட்டங்கள் எதிர்வரும் 2023 - 2027 ஆம் ஆண்டு வரையான 5 வருடகாலத்திற்க எவ்வாறானதாக அமையும் என்பதை வழிநடத்தும் ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்பு செயற்திட்டத்தில் இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் நேற்று (17) கைச்சாத்திட்டுள்ளனர்.
அதன்படி இலங்கை அரசாங்கத்தின் சார்பில் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் அதன் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர்-ஹம்டியும் கையெழுத்திட்டுள்ளனர்.
அதுமாத்திரமன்றி இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அமைப்புக்கள், நிதியங்கள் மற்றும் செயற்திட்டங்களின் தலைவர்களும் அதில் கைச்சாத்திட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்பு செயற்திட்டம் என்பது எதிர்வரும் 2030 ஆம் ஆண்டில் நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்வதை முன்னிறுத்தி - இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அல்லது முகவரமைப்புக்களின் இலக்கு மற்றும் பங்களிப்பின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் என்னவென்பதை வழிநடத்தும் நோக்கிலான திட்டமாகும்.
கொரோனா வைரஸ் பரவலின் விளைவாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள், பொருளாதார மீட்சி செயற்திட்டங்களுக்கு ஆதரவளித்தல், இலங்கை மக்களுக்கான சேவை வழங்கல், வேலைவாய்ப்பு, சுகாதார வசதி உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்தல் ஆகியவற்றை முன்னிறுத்திய நடவடிக்கைகள் என்பன இச்செயற்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் மேற்படி கைச்சாத்திடல் நிகழ்வு கொழும்பிலுள்ள நிதியமைச்சில் நேற்று புதன்கிழமை நடைபெற்றதுடன் அதில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் நாட்டிற்கு வருகைதந்திருக்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி ஒத்துழைப்பு அலுவலகத்தின் ஆசிய - பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் டேவிட் மெக்லக்லன்-கார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, 'அனைத்துத்தரப்பினருக்கும் பொதுவான முன்னுரிமைக்குரிய விடயங்களின் அடிப்படையில் சர்வதேச சமூகத்தை ஒன்றிணைத்து, பன்முகத்தன்மைவாய்ந்த தீர்வை நோக்கிப் பயணிப்பது அவசியம் என்பதைத் தற்போதைய உலகளாவிய சவால்கள் வெளிக்காட்டியுள்ளன.
அதன்படி இலங்கையைப் பொறுத்தமட்டில் அனைவரையும் உள்ளடக்கிய நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிய நகர்வில் தற்போதைய கைச்சாத்திடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்பு செயற்திட்டம் மிகமுக்கிய அங்கமாக அமையும்' என்று நம்பிக்கை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM