விமல் வீரவன்ச தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ; வாசுதேவ நாணயக்கார தகவல்

By T. Saranya

18 Aug, 2022 | 09:14 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையிலான பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி எதிர்வரும் மாதம் 04ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக ஸ்தாபிக்கப்படும்.

இனிவரும் காலங்களில் கூட்டணியாகவே தேர்தலில் போட்டியிடுவோம் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் நேற்று முன்தினம் இரவு பங்காளி கட்சிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சீனாவின் யுவான் வான் கப்பலை கௌரவமாக வரவேற்பதற்காகவே அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் செய்தோம்.சீனாவின் கப்பல் இலங்கைக்கு வருகை தந்ததை தொடர்ந்து நாட்டின் சுயாதீனத்தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளது.

சீனா கப்பல் விவகாரத்தில் இந்தியாவிற்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என இந்தியா குறிப்பிட்டதை தொடர்ந்தே கப்பல் இலங்கைக்கு வருகை தர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எம்மால் அடிபணிய முடியாது என்பதை வெளிப்படுத்தியுள்ளோம்.

பாராளுமன்றில் அங்கம் வகிககும் 08 அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையில் பரந்துப்பட்ட கூட்டணி எதிர்வரும் மாதம் 04 ஆம் திகதி ஸ்தாபிக்கப்படும்.

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும உட்பட அவருடனான தரப்பினர் பொதுஜன பெரமுனவில் இருந்து உத்தியோகப்பூர்வமாக வெளியேறியதை தொடர்ந்து கூட்;டணியில் இணைந்துக்கொள்ள முடியும்.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கிடையில் பொது இணக்கப்பாடு கிடையாது.மாறுப்பட்ட கருத்துக்கள் மாத்திரமே கட்சிகளுக்கிடையில் காணப்படுகிறது.

கட்சிகளுக்கிடையில் ஒருமித்த தன்மை காணப்படாமல் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஒருபோதும் ஸ்தாபிக்க முடியாது என்பதற்ககாவே கூட்டணியை அமைக்க தீர்மானித்தோம்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் கூட்டணியாகவே போட்டியிடுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணிலின் முழுமையான சர்வாதிகாரம் இப்போது வெளிப்படுகிறது...

2022-09-25 21:09:49
news-image

தேசிய பாதுகாப்பிற்காகவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்...

2022-09-25 21:14:01
news-image

போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக...

2022-09-25 22:04:58
news-image

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு...

2022-09-25 23:37:25
news-image

இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து...

2022-09-25 21:47:45
news-image

பெரும்போக அறுவடையின் பின் அரிசி இறக்குமதிக்கான...

2022-09-25 21:21:38
news-image

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை

2022-09-25 22:41:21
news-image

காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில்...

2022-09-25 20:54:53
news-image

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

2022-09-25 21:57:16
news-image

நாட்டை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின்...

2022-09-25 16:50:48
news-image

ஜனாதிபதி நாளை ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு...

2022-09-25 16:50:00
news-image

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள், நாய்...

2022-09-25 17:01:53