புளோரிடாவை சேர்ந்த 60 வயது பெண் உலகின் மிக நீண்ட தலைமுடி கொண்ட பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இவரது கூந்தலின் நீளம் 33.5மீ, அதாவது 110 அடி ஆகும்.
புளோரிடாவை சேர்ந்த ஆஷா மண்டேலா என்ற 60 வயதுடைய பெண் ஒருவர், உலகின் மிக நீண்ட தலைமுடி கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
கடந்த 2009 நவம்பரில் 5.96மீ ஆக இருந்த இவரது தலைமுடியின் நீளம், இப்போது 33.5 மீட்டரை தொட்டுள்ளது. இவர் கடந்த 40 வருடங்களாக பராமரித்து தன் கூந்தலை வளர்த்து வருகிறார்.
இதனை டிரெட்லாக்ஸ் என பலரும் கூறிவரும் நிலையில், ஆஷா அந்த பெயரை தான் விரும்பவில்லை என சொல்லியிருக்கிறார். "நான் dreadlocks என்ற வார்த்தையை விரும்பவில்லை, ஏனென்றால் என் தலைமுடி பற்றி பயம் கொள்ள (dread) எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன்" என்று கூறிய ஆஷா, இதை தனது கிரீடமாக பாவிப்பதாக பெருமிதம் கொண்டுள்ளார்.
சிறுவயது முதலே கனவுகளில் ராஜ நாகம் வருவதும், அது தன்னுடன் பேசுவது போன்ற அனுபவங்களை கொண்டதால், தன் வாழ்க்கையை மாற்றியமைக்கும் ஒரு ஆன்மீக தேடலின் ஒரு வழியாக தான் தலைமுடியை வளர்க்க தொடங்கியதாக அவர் தெரிவித்தார். "கனவுகளில் தோன்றும் ராஜநாகம் என்னிடம் பேசியது, மேலும் நான் தேர்ந்தெடுக்கப்பட்டவள் என்றும் கூறியது" என ஆஷா தெரிவித்துள்ளார்.
"நான் வெளியில் எங்காவது செல்லும்போது தன் தலைமுடியை என் ஸ்லிங் பேகிற்குள் அடக்கிக்கொள்வேன். அப்போது தான் அது தரையில் படாமல் இருக்கும்"
மேலும் தன் தலைமுடியை தன் கணவர் தான் வாஷ் செய்துவிடுகிறார். ஒரு முறை தலைக்கு குளிப்பதென்றால், ஆறு பாட்டில் ஷாம்பூ தேவைப்படுமாம். பின்னர் ஈரமான முடியை உலர்த்த இரண்டு நாட்கள் தேவைப்படுகிறது.
சரியான பராமரிப்பு இல்லாவிட்டாலோ, அல்லது போஷாக்கான பொருட்களை தலைமுடிக்கு பயன்படுத்தவிட்டாலோ காலப்போக்கில் என் தலை முடி சத்தை இழந்து இறந்துவிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM