(எம்.ஆர்.எம்.வசீம்)
ரணில் விக்ரமசிங்கவின் தேசிய அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை உள்வாங்கிக்கொள்வதற்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட இலஞ்சமே தமிழ் அமைப்புகளின் தடை நீக்கமாகவும். அத்துடன் இந்த தடை நீக்கத்துக்கு பின்னால் பாரிய சூழ்ச்சிகள் இருக்கின்றன.
குறிப்பாக 13ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கான நடவடிக்கையும் இடம்பெறுகின்றது என தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் வசந்த பண்டார தெரிவித்தார்.
தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் 18 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
2001 அமெரிக்காவில் இடம்பெற்ற விமான தாக்குதலுக்கு பின்னர் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்யும் அமைப்புகளை தடைசெய்யவேண்டும் என்ற ஐக்கிய நாடுகளின் பிரேரணைக்கு அமைய எமது நாடு 2012இல் பல அமைப்புகளையும் 500க்கும் மேற்பட்ட தனி நபர்களையும் தடை செய்து வர்த்தமானி வெளியிடப்பட்டது.
ஆனால் 2015இல் நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது தடைசெய்யப்பட்டிருந்த பட்டியலில் இருந்த உலக தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகிய இரண்டு அமைப்புகளையும் அந்த தடைப்பட்டியலில் இருந்து நீக்கினார்.
ஆனால் கோத்தாபய ராஜபக்ஷ் ஜனாதிபதியாக இருக்கும் போது அந்த அமைப்புகள் தொடர்பாக ஆராய்ந்து பார்த்து, 2021இல் மீண்டும் அந்த இரண்டு அமைப்புகளையும் தடைசெய்தார்.
ஆனால் தற்போது ரணில் விக்ரமசங்க ஜனாதிபதியானதுடன் தடைசெய்யப்பட்டிருந்த 6அமைப்புகளின் தடையை நீக்கி இருக்கின்றது.
அதில் கடந்த வருடம் தடைசெய்யப்பட்டிருந்த குறித்த இரண்டு அமைப்புகளும் இருக்கின்றன. இந்த தடை நீக்கத்தை ரணில் விக்ரமசிங்க எந்த அடிப்படையில் செய்தார் என்பதை நாட்டுக்கு தெரிவிக்கவேண்டும்.
அத்துடன் இந்த அமைப்புகளுக்கான தடை நீக்கப்படுவதற்கு பிரதானமாக 3 காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றது. ஆரம்பமாக டயஸ்போராவிடம் பாரியளவில் டொலர் இருக்கின்றது. அதனை நாட்டுக்குகொண்டுவரவேண்டும்.
அதற்கான நடவடிக்கையாகவே இதனை செய்திருக்கின்றார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைக்க இருக்கும் தேசிய அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
அதற்காக அவர்களுக்கு வழங்கும் இலஞ்சமாகவே இந்த டயஸ் போராக்களுக்கான தடை நீக்கமாகும் என்றும் அதேநேரம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெற இருக்கும் மனித உரிமை பேரவையில், யுத்தக்குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க மனித உரிமை பேரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சமர்ப்பிக்க இருக்கின்றது.
அதனை வெளி்ப்படுத்தால் தடுப்பதற்கு டயஸ் போராவுடன் செய்துகொள்ளப்பட்ட டீலே இந்த தடைநீக்கம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் யுத்தக்குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதற்கு தேவையான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றபோதும், அரசாங்கம் அதனை மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்து இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணாமல் அறிக்கை வெவராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.
அவ்வாறு அறிக்கை வெளிவந்தால், அதில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்காமல் இருப்பதற்கு டயஸ்போரா அரசாங்கத்துடன் டீல் ஒன்றை சைத்துக்கொண்டிருக்கின்றது. அதுதான் 13ஆம் திருத்தச்சட்டத்தை அமுல் படுத்துவதற்கான திருத்தம் 22ஆம் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதாகும்.
எனவே அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் மீண்டும் செயற்பட இடமளிக்கப்பட்டால் அன்றில் இருந்து இந்த நாடு பிரிவின்னைக்கு செல்ல ஆரம்பிக்கின்றது. சர்வதேசம் தலையிட்டு நாட்டை பிரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும். அதனால் டொலர் பெற்றுக்கொள்வதற்காக டயஸ்போராவுடன் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை, நாட்டை பாரிய அழிவுக்கே இட்டுச்செல்லும். அதற்கு இடமளிக்கக்கூடாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM