ஜனாதிபதி இல்ல வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் எம்மை இலக்கு வைக்கின்றனர் - ஹிருணிகா

By T. Saranya

18 Aug, 2022 | 03:14 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்ல வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக ஐக்கிய மகளிர் கூட்டணியின் அங்கத்தவர்கள் அரசாங்கத்தினால் இலக்கு வைக்கப்படுகின்றனர். 

விரைவில் என்னையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கக் கூடும். எனினும் அவற்றுக்கு நாம் அஞ்சப் போவதில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 9 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றார் என்பதை அவர் மறந்து விடக்கூடாது. 

எனவே ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அவர் தலைமையிலான அரசாங்கம் உடன் கைவிட வேண்டும். 

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத பெண்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

ஐக்கிய மகளிர் கூட்டணியின் செயலாளர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு , அவரிடம் சுமார் 4 - 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாசிஸவாதிகளாகக் காண்பிப்பதற்கே அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. 1988, 1989 களில் இடம்பெற்ற வன்முறைகளைப் போன்று இந்த ஆர்ப்பாட்டங்களையும் காண்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இல்ல வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காவே , ஐக்கிய மகளிர் கூட்டணியின் பெண்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். ஆனால் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்ல வளாகத்திலும் , பிரத்தியேக இல்ல வளாகத்திலும் மேலும் பல இடங்களிலும் நாம் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளோம். 

எனினும் அவற்றுக்கு எதிராக எம்மீது எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. காரணம் நாம் சட்டத்திற்கு முரணாக செயற்படவில்லை.

எனவே தற்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். ரணில் விக்கிரமசிங்க உயர்ந்த நாகரிகமான வர்க்கத்தை சேர்ந்தவர் என்பதாலேயே , அவரின் இல்ல வளாகத்தில் நான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையை சிலர் தவறாக விமர்ச்சிக்கின்றனர். முதலில் இந்த வர்க்க வேறுபாட்டை சமூகத்திலிருந்து இல்லாமலாக்க வேண்டும்.

தற்போது ஊடகங்களும் அமைதியாகியுள்ளன. எதிர்வரும் இரு மாதங்களில் நாடு மீண்டும் பழைய நிலைமைக்குச் செல்லும். அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகச் செய்வதற்கான போராட்டங்களை நாம் ஆரம்பிப்போம். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமைக்காக என்னையும் சீ.ஐ.டி.க்கு அழைக்கக் கூடும். 

நாம் எந்த சந்தர்ப்பத்திலும்; வன்முறைகளில் ஈடுபடவில்லை என்பதால் , அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணிலின் முழுமையான சர்வாதிகாரம் இப்போது வெளிப்படுகிறது...

2022-09-25 21:09:49
news-image

தேசிய பாதுகாப்பிற்காகவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்...

2022-09-25 21:14:01
news-image

போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக...

2022-09-25 22:04:58
news-image

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு...

2022-09-25 23:37:25
news-image

இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து...

2022-09-25 21:47:45
news-image

பெரும்போக அறுவடையின் பின் அரிசி இறக்குமதிக்கான...

2022-09-25 21:21:38
news-image

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை

2022-09-25 22:41:21
news-image

காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில்...

2022-09-25 20:54:53
news-image

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

2022-09-25 21:57:16
news-image

நாட்டை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின்...

2022-09-25 16:50:48
news-image

ஜனாதிபதி நாளை ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு...

2022-09-25 16:50:00
news-image

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள், நாய்...

2022-09-25 17:01:53