logo

சர்வகட்சி அரசாங்கம் சாத்தியமற்றது - உதய கம்மன்பில

Published By: Vishnu

18 Aug, 2022 | 02:57 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சர்வக்கட்சி அரசாங்கம் தோற்றம் பெறுவது சாத்தியமற்றது. பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் போது எதிர்க்கட்சி என்பதொன்று இல்லாமல் போகும் என்ற காரணத்தினால் எதிர்தரப்பினர் சர்வக்கட்சி அரசாங்கம் குறித்து கரிசனை கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள கம்யூனிச கட்சி காரியாலயத்தில் 17 ஆம் திகதி புதன்கிழமை மாலை இடம் பெற்ற பங்காளி கட்சிகளுடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து குறிப்பிட்டதாவது,

சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்று அமையுமாயின் அதற்கான செயற்திட்டம் சர்வக்கட்சிகளையும் உள்ளடக்கியதாக காணப்பட வேண்டும்.

சர்வக்கட்சி அரசாங்கம் பற்றி பேச்சளவில் மாத்திரம் குறிப்பிடப்படுகிறதே தவிர கொள்கை திட்ட அடிப்படையில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் முறையான கொள்கை திட்டம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.

ஆகவே பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது சாத்தியமற்றது.மக்களின் எதிர்பார்ப்பிற்கு முரணான நிர்வாக கட்டமைப்பே தோற்றம்.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்கும் போது பாராளுமன்றில் எதிர்க்கட்சி என்பதொன்று இல்லாமல் போகும் என்பதால் பிரதான எதிர்க்கட்சியினர் சர்வக்கட்சி அரசாங்கம் குறித்து அவதானம் செலுத்தவில்லை.

பாராளுமன்றில் தற்போது சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து எதிர்வரும் மாதம் 04ஆம் திகதி பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளோம்.எமது கூட்டணியில் எதிர்க்கட்சிகள் தாராளமாக கொள்கை அடிப்படையில் இணைந்துக்கொள்ளலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலையை வந்தடைந்த எம்வி எம்பிரஸ் சொகுசுக்...

2023-06-08 16:51:12
news-image

யாழில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர்...

2023-06-08 16:07:40
news-image

வினாக்களை வட்ஸ்அப்பில் ஆசிரியருக்கு அனுப்பி விடைகளைப்...

2023-06-08 15:22:25
news-image

வைத்தியர் முகைதீன் கொலை ! குற்றவாளிக்கு...

2023-06-08 15:14:39
news-image

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையை...

2023-06-08 15:02:07
news-image

கட்டுகஸ்தோட்டையில் பரீட்சார்த்தி மீது தாக்குதல் :...

2023-06-08 14:46:45
news-image

வயோதிபர் தொடர்பில் தகவல் கோரும் வவுனியா...

2023-06-08 14:57:15
news-image

அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நியமிக்க ஜனாதிபதி...

2023-06-08 14:39:35
news-image

குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக...

2023-06-08 14:32:57
news-image

லுணுகலையில் இரண்டு கோவில்கள் உடைக்கப்பட்டு திருட்டு

2023-06-08 14:16:26
news-image

ஒப்பந்தத்தை மீறிய 618 எரிபொருள் நிரப்பு...

2023-06-08 13:35:51
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-06-08 13:47:34