இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இந்தியாவின் ராஜ்கோட்டில் இடம்பெற்று வருகின்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 537 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை பொறுத்தவரையில் ஒரே இன்னிங்ஸில் மூன்று சதங்கள் பெறப்பட்டன.

இதில் பென் ஸ்டோக்ஸ் 128 ஓட்டங்கள், ஜோ ரூட் 124 ஓட்டங்கள் மற்றும் மொஹின் அலி 117 ஓட்டங்கள் என சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்டயிலக்கை உயர்த்தினர்.

இந்திய அணி சார்பில் ரவீந்ர ஜடேஜா மூன்று விக்கட்டுகளை கைப்பற்றியதுடன் உமேஸ் யாதவ், மொஹமட் சமி மற்றும் ரவிச்சந்திரக் அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவின்போது விக்கட்டிழப்பின்றி 63 ஒட்டங்களை பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கௌதம் கம்பீர் 28 ஓட்டங்கள் மற்றும் முரளி விஜய் 25 ஓட்டங்கள் பெற்று களத்தில் உள்ளனர்.