அஷ்ட சந்திராசனம்

Published By: Digital Desk 7

18 Aug, 2022 | 10:54 AM
image

டமொழியில் ‘அஷ்ட’ என்றால் ‘எட்டு’ என்று பொருள். ‘சந்திர’ என்பது சந்திரனைக் குறிக்கும். இது ஆங்கிலத்தில் High Lunge Pose என்றும் Crescent High Lunge Pose என்றும் அழைக்கப்படுகிறது.

அஷ்ட சந்திராசனத்தில் சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. மணிப்பூரகம் பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கிறது, சுவாதிட்டானம் படைப்பாற்றலை வளர்க்கிறது. அஷ்ட சந்திராசனத்தைத் தொடர்ந்து பயிலும்போது தன்மதிப்பு வளர்வதோடு மனநலமும் வளர்கிறது. 

செய்முறை 

விரிப்பில் நிற்கவும். இரண்டு பாதங்களுக்கு இடையில் சற்று இடைவெளி விட்டு நிற்கவும். மூச்சை வெளியேற்றியவாறு வலது காலை 3 முதல் 4 அடி பின்னால் வைக்கவும்.

கால் விரல்கள் தரையில் இருக்க வேண்டும். இடது காலை மடக்கவும். இடது முட்டியும் இடது பாதமும் நேர்க்கோட்டில் இருக்குமாறு வைக்கவும். மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தவும். உள்ளங்கைகள் ஒன்றை ஒன்று பார்த்தவாறு வைக்கவும். நேராகப் பார்க்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் ஆரம்ப நிலைக்கு வரவும். பின் இடது காலைப் பின்னால் வைத்து பயிலவும். குறிப்பு இடுப்பு மற்றும் முட்டியில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.

பலன்கள் 

முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது. முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது. இருதய நலனைப் பாதுகாக்கிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. உடலின் நெகிழ்வுத்தன்மையை வளர்க்கிறது. உடல் ஆற்றலை வளர்க்கிறது. மூட்டுகளை பலப்படுத்துகிறது. கால்களை உறுதியாக்குகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15