குழந்தைகளுக்கு சிறந்த தெரிவு

Published By: Digital Desk 7

18 Aug, 2022 | 10:37 AM
image

குழந்தைகளுக்கு துணி டயாபர்களை பயன்படுத்துவது நல்லது. குழந்தைக்கு அதனை அணிவது மென்மையாக இருக்கும் என்பதோடு நீண்ட நாட்கள் பயன்படுத்தவும் முடியும். அதனால் விலையும் குறைவாக இருக்கும். 

தற்போது புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான டயாபர்களில் ரசாயனங்கள் கலந்திருக்கின்றன. அவற்றை அணிவது குழந்தையின் சருமத்திற்கு நல்லதல்ல.

அவை குப்பைகளாக குவிந்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றன. ஒரு டயாபர் மக்குவதற்கு 500 ஆண்டுகள் தேவைப்படுகிறது. துணியால் தயாரிக்கப்படும் டயாபர்கள் சருமத்தை உலர்வாக வைத்திருக்கும் விதத்திலான துணிகளால் உருவாக்கப்படுகின்றன.

குழந்தைகளுக்கு ஏற்ற விதத்தில் மென்மையாக இருக்கும். சருமத்திற்கும் பாதுகாப்பு அளிக்கும். இந்த வகை டயாபரின் விலை அதிகமாக இருப்பதாக தோன்றினாலும் நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும் என்பதால் செலவு குறையும்.

அவற்றை எளிதாக துவைத்து உலரவைத்து பயன்படுத்தலாம். உடல் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்த இத்தகைய டயாபர்கள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை.

பிறந்த குழந்தை வளர்ந்து சுயமாகவே கழிவறைக்கு செல்வதற்கு பழகும் வரை சுமார் 4 ஆயிரம் டயாபர்கள் தேவைப்படலாம். துணியால் தயாரிக்கப்படும் டயாபர்களை பயன்படுத்தினால் நான்கில் ஒரு பங்குதான் செலவாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right