இந்திய குடியரசு தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் 

By T Yuwaraj

17 Aug, 2022 | 11:22 PM
image

புதுதில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரையும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இம்மாதம் இந்தியாவின் 14 வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் புது தில்லி சென்றிருக்கும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், குடியரசு தலைவர் மாளிகையில் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். 

அதற்கு முன் இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது திமுகவின் மக்களவைத் தலைவர் டி. ஆர். பாலு, தமிழக தலைமை செயலாளர் வெ. இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனிடையே இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் சந்தித்து தமிழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் பிரபல நடிகை காஸியானி பிணையில்...

2022-11-28 16:37:26
news-image

ரஷ்யா - உக்ரைன்  போரில் குளிா்காலம்,...

2022-11-28 17:01:08
news-image

துபாய், ஐரோப்பாவில் 30 தொன் போதைப்பொருள்...

2022-11-28 16:16:13
news-image

கணவனைக் கொலைசெய்து 22 துண்டுகளாக வெட்டி...

2022-11-28 15:04:43
news-image

சோமாலிய ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் படையினர் மோதல்:...

2022-11-28 13:14:47
news-image

பெண்கள் ஆடை பற்றிய கருத்தால் சர்ச்சை:...

2022-11-28 12:42:05
news-image

இந்தியா - பூடான் இணைந்து உருவாக்கிய...

2022-11-28 13:40:27
news-image

பாப்பரசருடனான தொலைபேசி உரையாடலை இரகசியமாக பதிவுசெய்த...

2022-11-28 12:26:34
news-image

மும்பைத் தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன்...

2022-11-28 12:16:33
news-image

மின் கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய...

2022-11-28 10:35:31
news-image

கொவிட் ஊரடங்கிற்கு எதிராக சீனாவில் போராட்டம்...

2022-11-28 09:59:28
news-image

கெமரூனில் மண்சரிவு : 14 பேர்...

2022-11-28 08:45:21