பிரபல நீச்சல் வீரர் ஜூலியன், வர்த்தகர் ஜொனதனிடம் எட்டரை மணி நேர விசாரணை

By T Yuwaraj

17 Aug, 2022 | 10:16 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல நீச்சல் வீரர் ஜூலியன் போலிங் வர்த்தகர் ஜொனதன் மார்டின்டைன்ஸ் ஆகியோரிடம்  இன்று ( 17)  எட்டரை  மணி நேரம் விசாரணை நடாத்தப்ப்ட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இன்று காலை 9.00 மணிக்கு அழைக்கப்பட்ட அவர்களிடம் மாலை 5.30 மணி வரை விசாரணை நடாத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

அதன் பின்னர் அவ்விருவரும் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 9 ஆம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டின் மீதான தாக்குதல் குறித்து விசாரணைகளுக்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.

நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் பிரபல நீச்சல் வீரர் ஜூலியன் போலிங் தாக்கல் செய்த மனுவும் உள்ளடங்கும். அம்மனுக்களிலேயே முன்னாள் பிரதமர் மஹிந்த, முன்னாள் அமைச்சர் பசில் உள்ளிட்டோரின் வெளிநாட்டுப் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரசவத்தின் போது வைத்திய பணிக் குழுவின்...

2022-09-30 09:20:19
news-image

சுயாதீனமாக செயற்படும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு...

2022-09-30 09:37:02
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-09-30 08:58:20
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை அதிகரிக்கும்

2022-09-30 09:20:17
news-image

திருடர்களை பாதுகாக்கும் அமைப்பே தேசிய சபை...

2022-09-29 21:45:55
news-image

" தற்போதைய அடக்குமுறைகள் மனித உரிமைகள்...

2022-09-29 16:37:02
news-image

மனித உரிமை பேரவையின் தீர்மானம் நியாயமற்றது...

2022-09-29 21:21:18
news-image

பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அவதானம்...

2022-09-29 15:11:35
news-image

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம்...

2022-09-29 21:25:13
news-image

ஜனாதிபதி நாடு திரும்பியதும் அதி உயர்...

2022-09-29 21:19:57
news-image

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை...

2022-09-29 21:54:43
news-image

பின்தங்கிய கிராமங்களில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு குருதிச்சோகை -...

2022-09-29 21:22:50