இலங்கையின் தேசியப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது - பாதுகாப்பு செயலாளர்

Published By: Digital Desk 4

17 Aug, 2022 | 10:14 PM
image

(எம்.மனோசித்ரா)

சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றைப் போல் அல்லாமல், இலங்கையின் தேசியப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்காக மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக நடத்தப்பட்ட 'ஆராய்ச்சிக் கருத்தரங்கு - 2022' இன் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஒரு நாட்டின் பிரஜைகள், பொருளாதாரம் மற்றும் பிற நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு நாட்டின் அரசாங்கத்தின் திறனே தேசிய பாதுகாப்பு என வரையறுக்கப்படுகிறது.

நிகழ்காலத்தில் இராணுவமல்லாத தன்மையின் பின்னணியில் பாதுகாப்பின் நோக்கம் பரந்தளவில் பொருளாதார பாதுகாப்பு, அரசியல் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, மனித பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதைச் சுற்றியே உள்ளது.

அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ பலம் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கங்கள் பயன்படுத்தும் பல்வேறு தந்திரோபாய முறைகளைப் பின்பற்றுகின்றன. தேசிய பாதுகாப்பானது சர்வதேச காரணிகளின் தாக்கத்திற்கு மத்தியில் அரசின் இறையாண்மையைப் பாதுகாக்கும் திறன் ஆகியவற்றையும் உள்ளடக்கும்.

ஆயுத மற்றும் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமான மீன்பிடி, புவி வெப்பமடைதல், அதன் விளைவாக கடல் மட்ட உயர்வு மற்றும் வானிலை மாற்றங்கள், அதிகரித்த கடல் மாசுபாடு, கடல் சுற்றுச்சூழல் தாக்கம், குறையும் மீன்வளம், கடல் வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மை அதிகரிப்பு, இயற்கை அனர்த்தங்களினால் இந்து பெருங்கடலில் சமுத்திரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஆகியன இந்து சமுத்திரத்தில் இலங்கையின் பாதுகாப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22