ஓபிஎஸ் நீக்கம் முதல் இபிஎஸ் தேர்வு வரை செல்லாது - உயர் நீதிமன்றம்

By Rajeeban

17 Aug, 2022 | 04:02 PM
image

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட ஓபிஎஸ் நீக்கம் முதல் இபிஎஸ் தேர்வு வரை அனைத்து தீர்மானங்களும் செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுக் குழுவை தனியாகக் கூட்டியதும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பின் படி கடந்த ஜூலை 11 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட ஒற்றைத் தலைமை தேவை, இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பு, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தல், திமுகவுக்கு கண்டனங்கள் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதம், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியீடு, அதிமுக எழுச்சி பெற ஒற்றைத் தலைமை தேவை, புதிதாக துணைப் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கம், அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் சிறப்புத் தீர்மானம் உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா - ஜப்பான்...

2022-09-29 16:28:26
news-image

பிரதமர் மோடியின் ஆலோசனைக்கு பிளிங்கன் பாராட்டு

2022-09-29 16:30:59
news-image

உலகத்துக்கான பாதுகாப்பு தயாரிப்புகளை உருவாக்குங்கள் -...

2022-09-29 16:22:02
news-image

சிட்னியில் ஆபத்தான கரும்பு தேரைகளால் அச்சம்

2022-09-29 14:57:25
news-image

ஆங் சாங் சூகியின் பொருளாதார ஆலோசகரான...

2022-09-29 14:31:59
news-image

உக்ரேனில் கைப்பற்றிய பகுதிகளை இணைக்கிறது ரஷ்யா

2022-09-29 13:08:24
news-image

பாக்கிஸ்தான் பொலிஸார் எதிர்நோக்கும் புதிய நெருக்கடி-...

2022-09-28 16:04:03
news-image

தலைமுடியை வெட்டி ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு...

2022-09-28 16:02:57
news-image

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு...

2022-09-28 15:11:59
news-image

சவுதி அரேபியாவின் பிரதமராக இளவரசர் முகமது...

2022-09-28 11:17:49
news-image

வீட்டுக் காவல் வதந்திக்கு பிறகு முதன்...

2022-09-28 10:44:04
news-image

ரஷ்யாவில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு

2022-09-28 09:21:33