இலங்கை நடிகர் ஹேமல் ரணசிங்க நடித்த தமிழ் படம் திருகோணமலையில் வெளியீடு

By Vishnu

17 Aug, 2022 | 04:09 PM
image

(சேனையூர் நிருபர்) 

இலங்கை சினிமா நட்சத்திரம் ஹேமல் ரணசிங்க  நடித்த தமிழ் திரைப்படமான "செகண்ட் ஷோ" எனும் திரைப்படமானது திருகோணமலை நெல்சன் திரையரங்கில்  திரையிடப்பட்டது.

இத் திரைப்படத்.தை  இலங்கையில் உள்ள டார்க் ரூம் திரைப்பட  தயாரிப்பு நிறுவனம் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள சிவா பிரதர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. 

இலங்கை நடிகர் ஹேமல் ரணசிங்க மற்றும் தமிழ் நாட்டினை சேர்ந்த நடிகை மற்றும் சிலரை கொண்டு இலண்டனில் காட்சி படத் தயாரிப்பு அனைத்தும் ஒளி வடிவமாக பெறப்பட்டு திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 

இளைஞர்களுக்கான ஒரு விழிப்புணர்வு திரைப் படமான இது சமூக மட்டத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து பல கதாபாத்திரங்களுடன்  தயாரிக்கப்பட்டுள்ளது. 

திருகோணமலையில் ந.டை.பெற்ற நிகழ்வில்  திரைப்பட கதாநாயகன் ஹேமல் ரணசிங்க, டாக் ரூம் படத் தயாரிப்பின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கௌசல்யா விக்ரமசிங்க, சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்