(க.கமலநாதன்)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆய்வாளர்களின் கருத்துக்களை பொய்யாக்கும் வகையில் டொனால் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.  அவரின் வெற்றி உலக பலவான்களாக உள்ள நாடுகளுக்கு மட்டுமே தாக்கம் செலுத்தும் எனவே இலங்கையுடனான வெளிநாட்டு கொள்கைளில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாதென பிரதி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது ஹிலரி கிளின்டன் வெற்றிபெறுவார் என அமெரிக்க தேர்தல் கள ஆய்வாளர்களும் அரசியல் விற்பன்னர்களும் வேறு நாடுகளின் அரசியல் அரசியல் துறைசார் பிரதிநிதிகளும் தெரிவித்தித்திருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிகைகை தகர்தெறிந்துவிட்டு டொனால் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். 

அதானல் தற்போது ஆய்வாளர்கள் தமது ஆய்வு படிமுறைகளில் திருத்தம் செய்துக்கொள்ள வேண்டிய நிலை தோன்றியுள்ளது. இந்நிலையில் இலங்கை அமெரிக்காவுடன் பொருளாதார உறவுகளை கொண்டுள்ள நாடாக இருப்பதால் டிரம்பின் வெற்றி எமது நாட்டின் மீது பாதிப்புக்களை தொடுக்ககூடும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.  அவரின் வெற்றியினால் ரஸ்யா உள்ளிட்ட உலக பலவான்களாக திகழும் நாடுகளுடனான பொருளாதார உறவுகளில் மாற்றம் ஏற்படக்கூடும்  இலங்கையுடனான பொருளாதார உறவுகளில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாது என்பதே எமது நிலைப்பாடு என்றார்.