திருகோணமலையில் 4 நூல்கள் வெளியிட்டுவைக்கப்பட்டன

By Digital Desk 5

17 Aug, 2022 | 08:27 PM
image

(சேனையூர் நிருபர் ) 

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நூலுருவாக்கத்திட்டத்தின் கீழ் அச்சுருவாக்கம் செய்யப்பட்ட நான்கு எழுத்தாளர்களின் நூல்  வெளியிடப்பட்டது.

திருகோணமலை மாவட்ட நூலாசிரியர்களான கலாபூஷணம் பி.கனகரத்தினம் (ஷெல்லிதாசன்) எழுதிய அம்மாவுக்கு பிடித்த கனி-சிறுவர்பாடல்.

வைத்திய கலாநிதி.த.ஜீவராஜ் அவர்களது கொட்டியாரப்பற்று வன்னிபங்கள் வரலாற்றுக்கட்டுரைகள்.

கவிச்சுடர்.சிவரமணி அவர்களது நவீன சீதை-சிறுகதை.

ஜனாப்.ஏ.எம்.முகைதீன் (மூதூர் முகைடீன்) கடலோரப்பாதை – சிறுகதை

ஆகிய நூல்கள் (14) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் திருமதி . சரண்யா சுதர்சன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினரான கிழக்கு மாகாண பிரதிப்பிரதம செயலகத்தின் (திட்டமிடல்) பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப்.M.A .முனாஸீர் அழைக்கப்பட்டிருந்ததுடன்.  நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தின் அரச உயர் அதிகாரிகள் மற்றும் இலக்கியவாதிகள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்