இலங்கை வருகிறாராம் முன்னாள் ஜனாதிபதி கோட்டா : திகதியை அறிவித்தார் உதயங்க

By T. Saranya

17 Aug, 2022 | 04:17 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தாய்லாந்து நாட்டில் தற்காலிகமாக வசிக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி (புதன் கிழமை) நாட்டுக்கு வருகை தருவார். மஹிந்த ராஜபக்ஷவின் ஆளுமை கோட்டாபய ராஜபக்ஷவிடம் சிறிதளவேனுமில்லை. அதுவே பிரதான குறைப்பாடாகும் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ இனி அரசியில் ஈடுப்பட போவதில்லை. நாட்டு மக்கள் மூடர்கள் அல்ல அவர் சிறந்த அதிகாரியே தவிர சிறந்த அரசியல்வாதியல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது எனவும் தெரிவித்தார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (17) வருகை தந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு வருகை தருவார். அவரது பாதுகாப்பு மற்றும் ஏனைய வசதிகள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். நாடு திரும்பியதும் அவர் மக்களுக்காக சேவையாற்றுவார் இருப்பினும் அரசியலில் ஈடுப்படமாட்டார்.

அரசியல் பழிவாங்களுக்குப்பட்டவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நியாயத்தை பெற்றுக்கொடுக்கவிலலை.கோட்டபய ராஜபக்ஷ ஆரம்பத்தையும்,தனது சகோதரதர்களையும் மறந்து விட்டார்.

அவர் விரைவாக நாட்டுக்கு வர வேண்டும்.இலங்கை மக்கள் அவரை பழிவாங்கமாட்டார்கள்,அவரி;ன வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.அவர் அருகில் இருந்த ஒருசிலரினால் அவர் பதவி விலக நேரிட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எனது பெரியம்மாவின் மகன் இருப்பினும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆளுமை கோட்டாபய ராஜபக்ஷவிடம் சிறிதளவேனும் இருக்கவில்லை. அதுவே பிரதான குறைப்பாடாகும்.

மக்கள் அதனை விளங்கிக்கொண்டார்கள். அவர் அரசியலில் ஈடுப்படமாட்டார் நாட்டு மக்களும் மூடர்கள் அல்ல கோட்டாபய ராஜபக்ஷ சிறந்த அதிகாரி ஆனால் அரசியலில் திறமையானவர் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது என்றார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த ஜுலை மாதம் கொழும்பில் ஒன்று திரண்ட மக்கள் போராட்டத்தை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் கடந்த ஜூலை மாதம் 13ஆம் திகதி அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான படைக்கு சொந்தமான இராணுவ விமானத்தில் மாலைத்தீவு நோக்கி சென்றனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அவரது தரப்பினருக்கு மாலைத்தீவில் புகலிடமோ,தற்காலிக தஞ்சமோ வழங்க கூடாது என வலியுறுத்தி மாலைத்தீவில் வாழும் இலங்கையர்கள் மாலைத்தீவில் கார்னிவல் பூங்காவில் போரட்டத்தில் ஈடுப்பட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி இராஜினாமாவை சபாநாயகருக்கு திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 14ஆம் திகதி பிற்பகல் மாலைத்தீவின் வெலனா சர்வதேச விமான நிலையத்திலிருந்து எஸ்.வி.788 விமானத்தின் ஊடாக சிங்கப்பூர் நோக்கி சென்றார்.

சிங்கப்பூரில் இருந்து அவர் கடந்த 11ஆம் திகதி தாய்லாந்து நோக்கி சென்றார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது தரப்பினருக்கு மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக தஞ்சம் வழங்கப்பட்டது என தாய்லாந்து பிரதமர் சேன் ஓ ஷா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர் தங்கியிருக்கும் அறையில் இருந்து வெளி வர கூடாது என பாங்காக் பொலிஸார் அறிவித்துள்ளதாக அறிய முடிந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணிலின் முழுமையான சர்வாதிகாரம் இப்போது வெளிப்படுகிறது...

2022-09-25 21:09:49
news-image

தேசிய பாதுகாப்பிற்காகவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்...

2022-09-25 21:14:01
news-image

போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக...

2022-09-25 22:04:58
news-image

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு...

2022-09-25 23:37:25
news-image

இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து...

2022-09-25 21:47:45
news-image

பெரும்போக அறுவடையின் பின் அரிசி இறக்குமதிக்கான...

2022-09-25 21:21:38
news-image

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை

2022-09-25 22:41:21
news-image

காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில்...

2022-09-25 20:54:53
news-image

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

2022-09-25 21:57:16
news-image

நாட்டை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின்...

2022-09-25 16:50:48
news-image

ஜனாதிபதி நாளை ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு...

2022-09-25 16:50:00
news-image

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள், நாய்...

2022-09-25 17:01:53