ஐந்தாவது மாதமாக தொடரும் உக்ரைன் போர்

Published By: Vishnu

17 Aug, 2022 | 08:17 PM
image

ரதிந்திர குருவிட்ட

உக்ரைன் யுத்தம் ஆரம்பமாகி ஐந்தாவது மாதத்தை தொட்டுவிட்டது. ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்ட சில பின்னடைவுகளுக்குப் பின்னர், உக்ரேனியர்களின் மன உறுதியை குறைத்து மதிப்பிடுதல், மேற்கேத்தேய உளவுத்துறையின் துல்லிய போக்கு மற்றும் உயிரிழப்புகளை குறைக்க புட்டின் கொண்டுள்ள விருப்பம் என்பவற்றை பார்க்கும்போது, ரஷ்யா தனது குறிக்கோள்களை அடைந்துகொள்ளும் நிலையில் இருப்பதாகக் தெரிகின்றது.

ரஷ்யாவின் வெற்றி தொடர்பாக கலந்துரையாடுவது அர்த்தமற்றது. ரஷ்யாவானது, கணிசமான தொழிற்றுறை தளத்தைக் கொண்ட ஒரு பெரிய நாடாகும். 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், உக்ரைன் அதன் உற்பத்தித் திறனில் 30 சதவீதத்தை 2020இல் இழந்துள்ளது. 2016இல் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 1990இல் இருந்த அளவின் 60% ஆக இருந்தது. 2020இல் உக்ரைன் 100,000 புதிய கார்களை விற்றது. ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் அங்கு 1.63 மில்லியன் கார்கள் விற்பனையாகின. 

ரஷ்யா ஒரு தொழிநுட்ப வல்லரசு அல்ல மற்றும் உற்பத்திப் பணிகளை ஒன்றாக செயற்படுத்த வேண்டும் என்று முன்மொழியும் ஓ-ரிங் பொருளாதார கொள்கையைக் கொண்ட நாடும் அல்ல. எனினும், உலகின் மின் விசைச்சுழலி உற்பத்தியில் 10 வீதத்தை இது பூர்த்திசெய்கின்றது. அத்தோடு, 40 வீத வணிக அணுமின் நிலையங்கள் கட்டுமானத்தில் உள்ளன. சிலிக்கன் பள்ளத்தாக்கில் (அல்லது ஷென்சென் பள்ளத்தாக்கு) அனைத்தையும் பிரதிபலிக்கும் ஒரு தன்னிறைவான தொழிநுட்ப சுற்றுச்சூழல் அமைப்பின் அடித்தளங்களை ரஷ்யா கொண்டுள்ளது. ஜெர்மனி உள்ளிட்ட வேறு எந்த ஐரோப்பிய நாட்டிலும் இதனைக் காண முடியாது. 

இந்தக் கட்டுரையில், ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய பொருளாதாரத் தடைகளின் தாக்கம், உலகப் பொருளாதாரத்தில் அதன் விளைவுகள் மற்றும் அதன் பொருளாதாரத்தை முடக்குவதை நோக்கமாகக் கொண்ட பொருளாதாரத் தடைகளின் நடுத்தர மற்றும் நீண்ட கால தாக்கங்களைத் தணிக்க ரஷ்யா கொண்டுள்ள மூலோபாயங்கள் என்பன சுட்டிக்காட்டப்படுகின்றன.

கருவியாக பயன்படுத்தப்படும் பொருளாதாரத் தடைகள்

ஒரு இறுக்கமான கருவியாக பொருளாதாரத் தடைகளை பயன்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. 1919இல் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த உட்ரோ வில்சன், “பொருளாதாரத் தடைகள் போரை விட பெரியது” என்றும், அதன் விளைவுகள், 

 “முற்றிலும் தனிமைப்படுத்தல்… தனிமனிதனிடமிருந்து போராடுவதற்கான அனைத்து விருப்பங்களையும் மூச்சுத் திணறலை நீக்குவது போல, ஒரு தேசத்தை அதன் உணர்வுகளுக்கு அப்பால் கொண்டுசெல்கிறது. இந்த அமைதியான, சத்தமின்றிய கொடிய தீர்வாக இந்த பொருளாதார கொள்கையை பயன்படுத்துங்கள், மற்றும் படைபலம் தேவைப்படாது. ஆனால், இது பயங்கரமான தீர்வாகும். இது புறக்கணிக்கப்பட்ட தேசத்திற்கு வெளியே ஒரு உயிரை இழக்கவில்லை, ஆனால் அது அந்த தேசத்தின் மீது ஒரு அழுத்தத்தைக் கொண்டுவருகிறது. எனது எண்ணப்படி, எந்த நவீன தேசமும் இதனை எதிர்க்க முடியாது.”

கடந்த 2022 பெப்ரவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தால் ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளின் நோக்கத்தை போலவே இதுவும் காணப்படுகின்றது. ரஷ்ய அரசியல் செல்வாக்கின் மீது பொருளாதார மற்றும் அரசியல் செலவீனங்களை சுமத்தி அதன் பொருளாதார வல்லமையை குறைத்து, யுத்தத்திற்கு நிதியளிக்கும் கிரெம்ளின் மாளிகையின் திறனை முடக்குவதே அவர்களது பிரதான நோக்கமாகக் காணப்பட்டது.  

ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை தமக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தாமல் செய்ய முடியும் என்றும், உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் தமது நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் பொருளாதாரத் தடைகளை பின்பற்றும் என்றும் ஜி7 நாடுகளும் அவற்றின் சில நட்பு நாடுகளும் நம்பின.

எனினும், ரஷ்யா போன்ற மிகப்பெரிய பொருளாதாரத்தின் மீது தடை விதிப்பது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. ரஷ்யா உற்பத்தி செய்யும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை எவ்வளவு வேண்டுமானாலும் கொள்வனவு செய்ய உலகின் பலம் மிக்க நாடுகள் பல தயாராக உள்ளன. ரஷ்யாவின் மலிவான சக்திவள உற்பத்தியில், ஜேர்மனின் பொருளாதாரம் தங்கியுள்ளது. அத்தோடு, ஐரோப்பாவின் பொருளாதார வளர்ச்சி ஜெர்மனியைச் சார்ந்துள்ளது. அவ்வாறு இருக்கும் போது, அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை விதிக்க முடியும் என எதிர்பார்ப்பது சாத்தியமானதாக தோன்றவில்லை.

பனிப்போர் காலத்தில்கூட மொஸ்கோவிலிருந்து ஜேர்மனி எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெற்றுக்கொண்டது. ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் எண்ணெயை கொள்வனவு செய்ய முடிந்ததால், உயர்தரமான பொருட்களை போட்டி விலையில் உற்பத்தி செய்யக்கூடிய வல்லமை ஜேர்மனிக்கு காணப்பட்டது. ரஷ்யா மீதான பொருளாதார தடைகளின் விளைவுகள் பற்றி ஜேர்மன் தொழிற்றுறையாளர்கள் கரிசனை கொண்டுள்ளனர். 

ஜேர்மனியின் முதன்மையான சக்திவள உள்ளீட்டின் 30 சதவீதமானவை ரஷ்யாவிடமிருந்தே கிடைக்கின்றது. ரஷ்ய எரிவாயு விநியோகத்தை நிறுத்துவது "கணக்கிட முடியாத அபாயங்களை" ஏற்படுத்தும் என கொலோனில் உள்ள ஒரு தனியார் ஆய்வு மையமான The Institut der deutschen Wirtschaft தெரிவித்துள்ளது. பற்றாக்குறை மற்றும் பணவீக்கத்தை நிர்வகிக்க முடியும் என்ற கருத்தை குறித்த ஆய்வு மையம் மறுதலித்துள்ளது.

ஜேர்மனி மீதான பொருளாதாரத் தடைகளின் காரணமாக, 2022 மே மாதம், மூன்று தசாப்த காலத்தில் முதற்தடவையாக நாடு வர்த்தகப் பற்றாக்குறையைப் பதிவுசெய்துள்ளது. மே மாதத்தில் ஏற்றுமதியானது ஏப்ரல் மாதத்தில் இருந்ததை விட 0.5 சதவீதம் சரிந்தது. இதேநேரம், இறக்குமதிகள் 2.7 வீதம் உயர்வடைந்து, 1 பில்லியன் டொலர் இடைவெளியை ஏற்படுத்தியது. 

எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதற்கு ரஷ்யா தீர்மானித்தால்,  ஒட்டுமொத்த பொருளாதாரமும் எவ்வாறான பாரதூரமான நிலையை சந்திக்க நேரிடும் என்பது பற்றி  பொருளாதார வல்லுநர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். குறிப்பாக தெரிவித்தால், "ஜேர்மனிக்கு செல்லும் குழாய் வழியான அதன் ஓட்டத்தை பாதியாக குறைத்து, அதாவது மொத்த திறனில் வெறும் 20 சதவீதம்” என கடந்த  ஜூலை 25 அன்று ரஷ்யா அறிவித்தது. இயற்கை எரிவாயு நுகர்வு தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய அவசர கூட்டத்தின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் மறுசீரமைப்புகள்

ஐரோப்பா தனது சக்திவள மூலங்களை கடந்த தசாப்தத்தில் பல்வகைப்படுத்த முயன்றது. இதன்போது புதுப்பிக்கப்பட்ட சக்திகளுக்கு விரைவான மாற்றம் ஏற்பட்டது. இதனை பார்க்கும்போது, ரஷ்யாவின் சக்திவள ஆற்றலில் தங்கியிருக்கும் நிலையை, இன்னும் ஒரு தசாப்த காலத்தில் ஐரோப்பா விலக்கிக்கொள்ளும் என்றே தோன்றியது. 

எரிசக்தி, குறிப்பாக எரிவாயுவிற்கான கேள்வி அதிகரித்து வரும் ஆசியா மீது அதிக கவனம் செலுத்திய ரஷ்யர்களுக்கும் இது பொருத்தமானதாக இருக்கும். ரஷ்யா, வருடாந்தம் 200 பில்லியன் கன மீட்டர் சக்திவளத்தை ஐரோப்பாவிற்கு விற்பனை செய்கின்றது. அத்தோடு, தற்போதுள்ள உட்கட்டமைப்பு மூலம், குழாய் எரிவாயு மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஆகிய இரண்டையும் சேர்த்து 80 கன மீட்டர் சக்திவளத்தை  ஆசியாவிற்கு வழங்க முடியும். சீனாவின் சக்திவள தேவை 2021இல் சுமார் 367 கனமீற்றராக காணப்பட்டதோடு, இது வேகமாக அதிகரித்து வருகின்றது. ரஷ்ய எண்ணெயிலிருந்து மேற்கத்தேய சந்தைகள் தம்மை விலக்கிக்கொள்ள முயற்சிக்கையில், ரஷ்யா அதன் பார்வையை கிழக்கு நோக்கி செலுத்தியிருக்கலாம். 

மொஸ்கோவிற்கும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே பாரிய பிரிவினைகள் காணப்படுவதாக தோன்றுகின்றது. குறித்த பிரிவினையின் தாக்கத்தை தாங்கிக்கொள்வதற்கு, ரஷ்யா சிறந்த நிலையில் உள்ளது. இது குறைந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ளது, மேலும் நாட்டின் இறையாண்மையை உறுதி செய்வதற்கான தனது மக்களின் விருப்பத்தை அரசு அணிதிரட்ட முடியும், இதனால் அவமானத்தின் மற்றொரு சகாப்தத்தைத் தவிர்க்கலாம். இதேபோன்ற ஒரு தாக்கத்தை மேற்கத்தேய நாடுகளும் எதிர்கொள்ளும் சாத்தியம் இல்லாமல் இல்லை. 

எதிர்வரும் மாரி காலத்திற்கு தேவையான எரிவாயு, ஸ்லோவாக்கியா மற்றும் ஒஸ்ரியாவிடம் மட்டுமே உள்ளது. ஐரோப்பாவின் ஏனைய நாடுகள், மாரி காலத்திலும் இறக்குமதியையே நம்பியிருக்க வேண்டும்.  மாரி காலத்திற்கான சக்திவள ஒதுக்கீட்டின் அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகளை ஐரோப்பிய தலைவர்கள் சமாளிக்க முடியுமா?

தொழிநுட்ப பற்றாக்குறையை சமாளித்தல்

ரஷ்யாவை தண்டிப்பதற்கு மேற்கத்தேய சக்திகள் முன்னெடுத்த முயற்சிகள் பொருளாதார முன்னணியில் முற்றிலும் தோல்வியடைந்தன. முன்னரை விட அதிக பணத்தை ரஷ்யா சம்பாதிக்கின்றது. தேவையான தொழிநுட்பங்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாமையே, ரஷ்யா இப்போது எதிர்கொள்ளும் பிரச்சினையாகும். 

ஜப்பான் மற்றும் ஜேர்மனியில் இருந்து கணிசமானளவு உபகரணங்கள் மற்றும் பாகங்களை ரஷ்யா இறக்குமதி செய்கின்றது. இந்நிலையில், குறித்த பொருட்களை சார்ந்துள்ள தொழிற்றுறைகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஜூன் மாத தொழிற்றுறை புள்ளிவிபரங்களின் பிரகாரம், ரஷ்ய வாகன தொழிற்றுறை முற்றாக சரிந்துள்ளது. குறித்த தொழிற்றுறையின் உள்ளீடுகளில் 60 வீதமானவை இறக்குமதி செய்யப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சீனாவும் இந்தியாவும் இவ்விடயத்தில் தலையிடாவிட்டால், வரப்போகும் ஆண்டுகளில் தொழிநுட்பத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் ரஷ்ய பொருளாதாரம் பாதிப்பை எதிர்கொள்ளும். உலகளாவிய தொழிநுட்ப இயங்குதளத்தில் சீனா முன்னணியில் திகழ்கின்றது. இந்நிலையில், மேற்கத்தேய நாடுகளுடனான அதன் உரிம ஒப்பந்தங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களை சீனா செயற்படுவதற்கான வாய்ப்பில்லை.  

வேறு வகையில் கூறுவதாயின், உள்ளுர் தொழிற்றுறையை அபிவிருத்தி செய்யும் வகையில் ரஷ்யா தனது உன்னதமான இருப்புக்களை பயன்படுத்தாவிட்டால், (இது தசாப்த காலம் செல்லும் செயற்பாடாகும்) அல்லது கறுப்பு சந்தை மூலம் தொழிநுட்பத்தை அணுக முயற்சிக்கவில்லை என்றால், ஆண்டுகள் செல்லச் செல்ல அதன் பொருளாதாரம் போட்டித்தன்மையை இழந்துவிடும். 

மாற்றுத்திட்டம்

இந்த எதிர்வுகூறலை ரஷ்யா எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது? வளர்ந்து வரும் ஏனைய சந்தைப் பொருளாதாரங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பை மேற்கொள்வது கிரெம்ளின் மாளிகையின் விருப்பமாகத் தெரிவதோடு, பிரச்சினையை தீர்க்க அதுவும் ஒரு வழியாகும். 

300 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான மதிப்புள்ள ரஷ்ய பணத்தை ஐரோப்பிய வங்கிகள் கைப்பற்றியமை மற்றும் ரஷ்யாவை SWIFTஇலிருந்து வெளியேற்றியமையானது, மேற்கத்தேய நாடுகளில் தமது சொத்துக்களை வைத்திருந்த மற்றும் அவர்களின் வங்கி வலையமைப்பை சார்ந்திருந்த பல நாடுகளுக்கு மோசமான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருக்கும். எதிர்ப்புக்கான ஆயுதமாக டொலரையும் தொழிற்றுறையையும் மாற்றியமையானது, சர்வதேச நிதி கட்டமைப்பில் பல நாடுகள் கொண்டிருந்த நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது.

ஆசிய, ஆபிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் ரஷ்யா தனது நல்லுறவைப் பயன்படுத்தி இணையான வலையமைப்பை உருவாக்க முடியும். குறிப்பாக இந்நாடுகளில்  மக்கள் தொகை, சந்தைகள் மற்றும் நுகர்வு அளவுகள் அதிகரித்து வரும் நிலையில், குறித்த நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இதன் அடிப்படையில், ரஷ்யாவுடன் தொழிநுட்ப நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று நம்பலாம். 

மேற்கத்தேய நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகள், ஜி20 நாடுகளை வலுப்படுத்தும். இம்முறைய ஜி 20 உச்சிமாநாடு, இந்தோனேசியாவின் பாலி மாகாணத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் நெருக்கடியை தொடர்ந்து உலக அரங்கில் புட்டின் பங்குபற்றும் மிகப்பெரிய சந்தர்ப்பம் இதுவாக அமையும். வளர்ந்து வரும் சந்தைகள் வெறும் பணம் சம்பாதிப்பதற்கும் திறமை மற்றும் வளங்களைப் பெறுவதற்குமான இடமாக மட்டும் இருக்காது என்றும், மாறாக, ஒரு கடுமையான புவிசார் அரசியல் கட்டமைப்பை உருவாக்குகின்றது என்பதையும் இந்த உச்சிமாநாடு உலகிற்கு வெளிப்படுத்தலாம். 

கட்டுரையாளர் பற்றி  

ரதிந்திர குருவிட்ட, இலங்கையின் கொழும்பைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆய்வாளராவார். இவர் சிங்கப்பூரின் NTUவில் உள்ள சர்வதேச கற்கைகள் தொடர்பான கல்வி நிறுவனமான எஸ். இராஜரட்ணம் கல்வியகத்தில் கற்று முதுநிலை பட்டத்தைப் பெற்றுள்ளார். அமெரிக்காவிலுள்ள டேனியல் கே. இன்யூயே ஆசியா-பசிபிக் பாதுகாப்பு ஆய்வு மைய புலமைப்பரிசில்தாரியும் ஆவார். அத்தோடு, அமெரிக்க வெளியுறவுத் துறையால் நடத்தப்படும் சர்வதேச பார்வையாளர் தலைமைத் திட்டத்தின் (IVLP) பங்கேற்பாளராவார். இவர், பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான பல கட்டுரைகளை எழுதியுள்ளதோடு, இலங்கை-சீன உறவுகள் குறித்து ஆழமான கட்டுரைகளை எழுதியுள்ளார். Factum என்பது சர்வதேச உறவுகள், தொழிநுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றி இலங்கையில் செயற்படும் ஆசியாவவை மையமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழுவாகும். www.factum.lk என்ற இணையத்தளத்தில் இது தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49