கிரிக்கெட்டைப் பற்றி பா. ரஞ்சித் தயாரிக்கும் புதிய படம்

By Vishnu

17 Aug, 2022 | 12:57 PM
image

உள்ளூர் கிரிக்கெட்டை மையப்படுத்தி தயாரிப்பாளரும், இயக்குநருமான பா. ரஞ்சித் தயாரிப்பில் பெயரிடப்படாத புதிய திரைப்படம் தயாராகிறது. இதில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் ஜெய்குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத முதல் திரைப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு பாக்கியராஜ், ப்ரீத்வி பாண்டியராஜன், நடிகைகள் கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமிழ். ஏ. அழகன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன், லெமன் லீப் கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கணேசமூர்த்தி இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' சர்வதேச மற்றும் தேசிய அளவிலான கிரிக்கெட் வீரர்களை தவிர்த்து, உள்ளூர் அளவில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் வீரர்கள், அவர்களுடைய வாழ்வியல், அவர்களின் நட்பு ஆகிய விடயங்களை மையப்படுத்தி இந்த திரைப்படம் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு தொடக்க விழாவுடன் தொடங்கி இருக்கிறது. தமிழக நகரான அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் படபிடிப்பு நடைபெற்று வருகிறது'' என்றார்.

படத்தில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் கிரிக்கெட் விளையாட்டில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விளையாட்டு துறை ரீதியான வாய்ப்பு குறித்து பேசும் படைப்பு என்பதாலும், இந்த படத்திற்கு அறிவிப்பு நிலையிலேயே ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோதிகா நடிக்கும் பொலிவுட் திரைப்படம் 'ஸ்ரீ'

2023-01-31 16:22:19
news-image

நடிகர் நானி நடிக்கும் 'தசரா' திரைப்படத்தின்...

2023-01-31 16:23:17
news-image

நடிகர் சிம்ஹா நடிக்கும் 'வசந்த முல்லை'...

2023-01-31 15:27:35
news-image

'மைக்கேல்' படத்தில் சிரிக்காத சந்தீப்

2023-01-31 15:23:56
news-image

'பொம்மை நாயகி' படத்திற்கு யோகி பாபு...

2023-01-30 10:20:02
news-image

‘ஸ்ட்ரைக்கர்’படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

2023-01-30 10:17:30
news-image

சுமித்ரா பீரிஸ் – உலக பிரசித்தி...

2023-01-29 22:36:42
news-image

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்.ஜி.எம்’ படத்தின்...

2023-01-28 15:47:38
news-image

செல்வராகவன் நடிக்கும் 'பகாசூரன்' படத்தின் வெளியீட்டுத்...

2023-01-28 14:29:03
news-image

நடிகர் ஹிர்தூ ஹாரூன் நடிக்கும் 'தக்ஸ்'...

2023-01-28 14:27:09
news-image

ஜான்சி வலைத்தள தொடரின் மூன்றாம் பாகம்...

2023-01-28 14:23:23
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடக்கிவைத்த வை.ஜி....

2023-01-29 09:44:03