தூக்க மயக்கத்தில் புகையிரதத்தில் இருந்து விழுந்த இராணுவ சிப்பாய் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Vishnu

17 Aug, 2022 | 12:16 PM
image

தூக்கத்தினால் இறங்க வேண்டிய புகையிரத நிலையத்தை தவற விட்டமையால், அடுத்த புகையிரத நிலையத்தில் அவசரமாக இறங்க முற்பட்ட இராணுவ சிப்பாய் புகையிரதத்தில் இருந்து தவறி வீழ்ந்து காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் எஸ். விஜயசிங்க (வயது 26) எனும் இராணுவ சிப்பாயே காயமடைந்துள்ளார். 

குறித்த சிப்பாய் தனது ஊரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடமைக்காக கொழும்பு - யாழ்ப்பாணம் கடுகதி புகையிரதத்தில் பயணித்துள்ளார்.

யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் இறங்க வேண்டியவர், தூக்கத்தினால் அதனை தவற விட்டுள்ளார்.

திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்தவர் புகையிரதம் சுன்னாகம் புகையிரத நிலையத்தில் தரித்து நிற்பதனை அவதானித்து, தூக்க கலக்கத்துடன் அவசரமாக இறங்க முற்பட்ட நிலையில் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளார். 

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹவாய் 'ரிம்பேக்' சர்வதேச கடற்படைப் பயிற்சியில்...

2026-07-21 15:53:28
news-image

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல்...

2026-07-21 15:47:00
news-image

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு மீண்டும்...

2026-07-21 15:27:16
news-image

இரத்தினபுரி வைத்தியசாலையில் உயிரிழந்த மகளின் மரணம்...

2026-07-21 14:46:43
news-image

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச சேவையும்...

2026-07-21 14:55:45
news-image

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை...

2026-07-21 14:39:05
news-image

தித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு...

2026-07-21 14:51:49
news-image

அட்டனில் தற்காலிக கடைகளை அகற்றச் சென்ற...

2026-07-21 14:24:27
news-image

மரதன்கடவலையில் சொகுசு பேருந்து – லொறி...

2026-07-21 14:25:22
news-image

ஹாலிஎல , உனுகொல்ல தோட்ட இளைஞர்...

2026-07-21 13:59:26
news-image

இலங்கையில் விவசாய இயந்திர மையம் அமைப்பது...

2026-07-21 13:42:48
news-image

ஹோமாகம - கட்டுவான  தலைக்கவச உற்பத்தி...

2026-07-21 13:43:07