சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முயன்ற 10 பேர் கைது

Published By: Vishnu

17 Aug, 2022 | 12:09 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

தலைமன்னார் கடற்பரப்பில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது தலைமன்னார், குருசைப்பாடு பிரதேச கடற்பரப்பில் இருந்து வெளிநாட்டு சட்டவிரோதமாக பயணிப்பதற்கு முயன்ற படகை செலுத்தியவர்கள் இருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்களுள் 18 மேற்பட்ட 4 ஆண்கள் 2 பெண்கள் மற்றும் 18 வயதுக்கு குறைந்த 4 சிறுவர்கள் உள்ளடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் பேசாளை, உருமலை, கிளிநொச்சி மற்றும் கந்தளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36